அனைத்து திருமணங்களுக்கும் பதிவு அவசியம்

கடந்த நவ. 24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்டப் பதிவாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்து திருமணங்கள் சட்டம், இந்திய, கிறிஸ்துவ திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், முகமதியர்கள் ஷரியத்திருமண சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த திருமணங்கள் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்ற எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திருமணப் பதிவிற்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தை எந்தவித விடுதல் அல்லது பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட முகவரி, வயது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றுடன் ரூபாய் 100 கட்ட ணத்தை செலுத்தி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இருந்தால் சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் சரியான தகவல்கள் தராத அல்லது உரிய ஆவணங்கள் இணைக்கபடவில்லை என்றால் திருமணப் பதிவாளர் குறைகளை சரி செய்து மனுதாரருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திருமணப் பதிவு விதிகளின் படி திருமணம் நடக்கவில்லை என்று திருமணப்பதிவாளரால் உணர்ந்தால் அந்த மனுவும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட மனுதாரர் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளரால் பிறப்பிக்கப்படும் உத்தரவு திருப்தி இல்லை என்றால் உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவருக்கு மேல் முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணையே இறுதியானது ஆகும்.


எனவே கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் எந்தவித ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாத அல்லது வீதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். திருமணப்பதிவு தொடர்பான விவரங்கள் அனைத்து பதிவு அலுவலகங்கள், மாவட்ட, துணைப் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் www tnreginert.net தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆங்கில புத்தாண்டு சென்னையில் கெடுபிடி ?

இன்று நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் பிறக்கிறது. சென்னையில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பல்வேறு தரப்பினரும் தயாராக உள்ளனர்.

மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற இடங்களில் இன்று மாலையில் இருந்தே இளைஞர் பட்டாளங்கள் கூட்டம், கூட்டமாக வலம் வரத் துவங்கி விடுவர். நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகள் போன்ற தனியார் இடங்களிலும் புத்தாண்டு விருந்துகளுக்கு ஏற்காடுகளை செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிய, சென்னை காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை நகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் பணியாற்றும் 12 ஆயிரம் காவலர்களும், தமிழ்நாடு விசேஷ காவல் படையின் 6 கம்பெனி காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினா, எலியட்ஸ் பீச், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதி சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற போர்வையில் பெண்களிடம் அத்துமீறி நடப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுப்போம். மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார் .

கேரளாவில் பிரிட்னி

கேரளாவில் பிரிட்னி மும்பையில் படகு கொண்டாட்டத்துக்கு ஆள் இல்லாத நிலையில், சர்வதேச பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், இந்தியாவில் சொகுசுப் படகில் புத்தாண்டு கொண்டாடுகிறார்.
கேரளா வந்துள்ள அவர் இன்று முழுவதும் ஆலப்புழாவில் கடலோர நீர்ச்சூழலில் (பேக் வாட்டர்) சொகுசுப் படகில் புத்தாண்டு கொண்டாடுகிறார்.
Ôஇந்தியாவில் அழகிய மாநிலமான கேரளாவின் கடலோரப் பகுதியில் தனிமையில் புத்தாண்டை கொண்டாட பிரிட்னி விரும்பினார்ÕÕ என பிரிட்னியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குவைத் எண்ணெய் கப்பலைக் கடத்த கொள்ளையர்கள் முயற்சி

அரபிக்கடல் அருகே வந்து கொண்டிருந்த குவைத் எண்ணெய் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
அரபிக்கடல் அருகே, சோமாலிய கடற்பகுதியில் இன்று குவைத் எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது.அப்போது, திடீரென படகில் வந்து அந்த கப்பலை விரட்டிய கொள்ளையர்கள், தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி, அந்த கப்பலைக் கடத்த முயன்றனர். இருப்பினும் அதிர்ஷடவசமாக அந்த கப்பல், கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கோலாலம்பூரிலிள்ள சர்வதேச கடற்கொள்ளை தடுப்புக் கழகத் தலைவர் நோயல் சூங் தெரிவித்தார்.

குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி

இனவெறி தாக்குதல் காரணமாக, வரும் ஆண்டில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களின் வருகை குறையும் என்பதால், ஆஸ்ட்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது இந்த ஆண்டில் பல முறை இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.

விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது

நிமிடத்துக்கு 20 பைசா

நிமிடத்துக்கு 20 பைசா கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.உள்ளூர் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு மாதம் ரூ.27ம், எஸ்டிடி அழைப்புக்கு ரூ.77ம் கட்டணம். இந்த வசதியை இணையதளம் மூலம் ஆன்&நெட் ரீசார்ஜ் செய்து பெறலாம்.

இது சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு அழைப்புகளுக்கும் பொருந்தும். பிற நிறுவன வாடிக்கையாளரை அழைப்பதற்கு இப்போது அமலில் உள்ள வினாடி அல்லது நிமிட கட்டண முறை தொடரும்.

உலகில் அதிகம் பேரை கவர்ந்தது ஈபிள் டவர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர், சர்வதேச அளவில் அதிகம் பேரை கவர்ந்த கட்டிடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாஜ்மகால், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.ஓட்டல்ஸ் டாட் காம் என்ற இணையதளம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த உலகின் புகழ் பெற்ற கட்டிடங்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத் தியது.
10 ஆயிரம் பேர் இதில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இதில், அதிகபட்சமாக 16 சதவீதம் பேர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவரை சிறந்த கட்டிடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரோம் நாட்டின் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் 9 சதவீத ஓட்டுக்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 16ம் நூற்றாண்டில் அன்பின் சின்னமாக ஷாஜகா னால் கட்டப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மகால் 8 சதவீத ஓட்டுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்காவில் உள்ள கோல்டன் கேட் பிரிட்ஜ், எம்பயர் ஸ்டேட் பில்டிங் மற்றும் சுதந்திரதேவி சிலை ஆகிய மூன்றும் தலா 7 சதவீத ஓட்டுக்களுடன் 4,5,6ம் இடங்களைப் பிடித் தன.
மேலும் ஆஸ்திரேலியாவின் ஓபெரா ஹவுஸ், பார்சிலோனாவில் உள்ள சக்ரதா பெமிலியா, ஏதென்சில் உள்ள அக்ரோபலிஸ், ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் ஆகியவை டாப் 10 இடங்களைப் பிடித்த மற்ற கட்டிடங்களாகும்.

3 நாட்களில் 3 நாட்களில் ரூ.100 கோடி குவித்த 3 இடியட்ஸ்

ஆமிர் கான் நடித்துள்ள 3 இடியட்ஸ் படம் திரையிட்ட இடமெல்லாம் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான மூன்றே தினங்களில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். இது ஆமிர்கானின் முந்தைய படமான கஜினியை விட 30 சதவிகிதம் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் 2000 திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 3 இடியட்ஸ்.

முன்னாபாய் தந்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், விதுவினோத் சோப்ரா தயாரிப்பில் உருவான படம் இது. ஒரு இந்திப் படம் இந்த அளவு அதிக பிரிண்டுகளுடன் உலகம் முழுக்க ரிலீசானது இதுவே முதல் முறை. ரிலீசுக்கு முந்தைய தினம் நடந்த பிரிமியர் ஷோவில் மட்டும் இந்தப் படம் ரூ 9 கோடி வசூலைப் பெற்றது. ரிலீஸ் ஆன முதல் மூன்று தினங்களில் மட்டும் இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. பொதுவாக ஆமிர் கானின் படங்களுக்கு பிரிட்டனில் பெரிய மார்க்கெட் கிடையாது. கஜினி கூட அங்கே சராசரிப் படம்தான். ஆனால் இந்த முறை 3 இடியட்ஸ் அங்கும் ஹிட் படமாகியுள்ளது (ஆனால் இன்று வரை பிரிட்டனில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் இரண்டுதான்.
ஒன்று ரஜினி நடித்த சிவாஜி - தி பாஸ், அடுத்தது ஷாரூக்கானின் கபி அல்வித நா கெஹ்னா). மும்பை சினிமாக்ஸ் மல்டிப்ளெக்ஸில் இந்தப் படத்துக்கு 92 முதல் 95 சதவிகித ரசிகர்கள் குவிந்தனர், ஞாயிற்றுக் கிழமை. அதே நேரம் அவதார் படம் இங்கு 90 சதவிகிதத்துக்கும் மேலான ரசிகர்களுடன் சக்கைப் போடு போடுகிறது. வெர்சோவா ப்ராபர்ட்டியில் உள்ள சினிமாக்ஸ் மல்டிபிளெக்ஸில் 3 இடியட்ஸ் படம் ஒரு நாளைக்கு 25 காட்சிகள் ஓடுகிறது.


வார நாட்களிலேயே இதில் சராசரியாக 60 சதவிகிதம் அளவு ரசிகர்கள் வருகிறார்களாம். ஆனால் இங்கும் அவதாருக்குதான் முதலிடம். 95 சதவிகித ரசிகர் கூட்டம் குவிகிறதாம் அவதாருக்கு.

வேலூர் கோட்டையில் காவல்துறையினர் குவிப்பு

வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் கோட்டையில் வரலாற்று பழமை வாய்ந்த மசூதி உள்ளது.

இதனை தொழுகை நடத்த திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்த வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மசூதியில் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள ஒரு அமைப்பினர் கோட்டையில் உள்ள மசூதியில் அத்துமீறி இன்று தொழுகை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனையடுத்து கோட்டையில் இன்று கூடுதலாக காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

கோட்டை நுழைவு வாயில் வாகன சோதனை மற்றும் தீவிர விசாரணைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் கோட்டையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றம் நிலவியது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ பெல்லோஷிப்!

ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ பெல்லோஷிப் வழங்கி கவுரவித்தது பிரிட்டனின் புகழ்பெற்ற ட்ரினிட்டி இசைக் கல்லூரி.2 ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, உலகமெங்கிலும் பல்வேறு அமைப்புகள் சிறப்பு செய்து வருகின்றன.
இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆற்றிய sசிறந்த சேவையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் சார்பில் அவருக்கு 'கவுரவ பெல்லோஷிப்' விருது வழங்கப்பட்டது.பிரபல இசையமைப்பாளர் பார்ரி வேட்ஸ்வொர்த் இந்த விருதை வழங்கினார்.இரண்டு ஆஸ்கர் விருதுகளும், 5 தேசிய விருதுகளும் பெற்றுள்ள ரஹ்மான், விரைவில் கிராம்மி விருதுகளும் பெறுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

அனாதை குழந்தைகளுக்கு ரூ.47 லட்சம் நன்கொடை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் அனாதை குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர். அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எஸ்ஓஎஸ் அநாதை குழந்தைகள் தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இது உதவி செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்த நிறுவனத்துக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர். ÔÔஅனாதை மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு எஸ்ஓஎஸ் நிறுவனம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
அவர்களது சிறந்த சேவையில் பங்கு கொள்வதற்காக இந்த நிதியுதவியை வழங்குகிறோம்ÕÕ என ஜோலி தெரிவித்தார். ÔÔஇந்த விடுமுறை சீசனை நாம் எல்லோரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம்.
இந்த நேரத்தில் உறவுகளை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறதுÕÕ என பிராட் தெரிவித்தார்.

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

நடந்து செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக புத்தாண்டு வாழ்த்து சொன்னால் அவர்கள் மீது ஈவ் டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதோ வந்து விட்டது புத்தாண்டு. இன்னும் 3 நாட்கள்தான். சென்னை மாநகரம் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. கடற்கரைகளில் புத்தாண்டுக்கு முந்தைய டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவி களை கட்டியிருக்கும்.
சாலைகளில் வருவோர், போவோரிடம் கையைக் குலுக்கி ஹேப்பி நியூ இயர் என்று சொல்வது சகஜம். இதில் சில நேரங்களில் பிரச்சினையாகி சண்டை வரை போய் விடுவதும் உண்டு.இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பெண்களை நிறுத்தி வலுக்கட்டாயமாக அவர்களது கையைப் பிடித்து குலுக்கி ஹேப்பி நியூ இயர் சொல்வோரும் உண்டு.

இதனாலும் சர்ச்சைகள் எழுவதுண்டு.இதைத் தடுக்க தற்போது போலீஸார் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.மகாபலிபுரம் டி.எஸ்.பி. சம்மந்தமூர்த்தி இதுகுறித்து கூறுகையில், திருப்போரூர், பூஞ்சேரி, மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம் உள்பட 10 இடங்களில் புத்தாண்டையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணிவரை புத்தாண்டு கொண்டாட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். அன்றைய தினத்தில் ஹோட்டல்களில் ஆபாசமாகவும் அருவருப்பான உடையுடனும், நடனம் ஆடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் வலுக் கட்டாயமாக புத்தாண்டு வாழ்த்து சொல்பவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
மேலும், சென்னை கடற்கரைச் சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிக் கொண்டு, ஹேப்பி நியூ இயர் என கத்திச் செல்லக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்கனவே மாநகர போலீஸார் விதித்துள்ளனர்

விமான நிலையத்திற்கு ஆட்டோவில் சவாரி செய்த மமதா பானர்ஜி

டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்ட ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி நடந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தார்.நேற்று மாலை டெல்லி செல்வதற்காக காரில் கிளம்பினார் மமதா. வழியில் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் மாலை 4.15 மணிக்கு அவர் வந்தபோது அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மமதாவின் காரால் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது.5 மணிக்கு டெல்லி செல்லும் விமானம் கிளம்பும். அதற்குள் விமான நிலையத்தை அடைய வேண்டுமே என்பதற்காக காரிலிருந்து வேகமாக இறங்கிய மமதா விடுவிடுவென நட்நதார்.ஒரு ஆட்டோவைப் பிடிக்குமாறு மமதா கூறவே தொண்டர்கள் வேகமாக சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்தனர். பின்னர் அந்த ஆட்டோவில் ஏறி விமான நிலையத்தை அடைந்தார் மமதா.முஹர்ரம் பேரணி காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.விமானத்தை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக அடித்துப் பிடித்துக் கொண்டு மமதா விமான நிலையம் போனால், விமானம் 55 நிமிடம் தாமதம் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்ற போக்குவரத்து நெரிசலில் விமானி சிக்கிக் கொண்டதால் விமானம் தாமதமாம்.இதெப்படி இருக்கு...!

சன் பொய்கள்… அடுக்குமா இது?

ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவதில் சன் டிவிக்கு நிகர் அவர்களே. இவர்களது இந்த ஸ்டைலால், இவர்கள் சொல்லும் உண்மைச் செய்திகளைக்கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.


அரசியல் ரீதியாகவும் சரி, திரைத்துறைச் செய்திகளாக இருந்தாலும் சரி, செய்திகளை இந்த சேனல் தரும் விதம் மிகுந்த எரிச்சலையும், ‘இப்படி அநியாயத்துக்கு புளுகிறார்களே’ என்ற கோபத்தையும் விஷயமறிந்த ஒவ்வொருவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை சென்சேஷனலாகத் தருவது, செய்தி சொல்வதில் ஒரு தனி கலைதான் என்றாலும்… வரைமுறையில்லாமல், தாங்கள் சொல்வதே உண்மை என பிடிவாதமாக தவறான தகவல்களைத் தருவது, எங்கே போய் நிறுத்துமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளது நிஜம்.


சன்னும் ஜெயாவும் தேர்தல் முடிவு சொல்லும் விதம் இருக்கிறதே… யார் சிறந்த பொய்யர் என்ற போட்டியில் சர்வதேச விருது பெறும் அளவுக்கு தகுதிவாய்ந்த சமாச்சாரம் அது.


திமுக வெற்றி முகம் காட்டினால், லெட்டர் பேடு தலைவர்கள் முதல் பெருந்தலைகள் வரை சன் ஸ்டுடியோவில் வரிசை கட்டி நிற்பார்கள், கருத்து என்ற கருமத்தைச் சொல்ல. தோல்வி முகம் காட்டினாலோ, பாதியிலேயே நேரடி ஒளிபரப்பு ஜகா வாங்கும். அந்த இடத்தில் ஏதாவது ஒரு காமெடி ஷோ ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் காமெடியை மக்கள் மறக்க இந்தக் காமெடி. இவர்களுக்கு சற்றும் சளைக்காத கூத்து ஜெயாவிலும் அரங்கேறும் என்றாலும், அதில் கூட அவர்களால் சன் அளவு பிரகாசிக்க முடியவில்லை!


காதலில் விழுந்தேன் என்ற குப்பைப் படத்தை வெற்றிப் படமாக்க சன் டிவி செய்த கண்றாவி உத்தியில் ஆரம்பித்தது சினிமாத் துறைக்கு சாபக்கேடு.


வேட்டைக்காரன் ரிலீஸ் வரை அதையே பிரதானமாகப் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர். கதை இருக்கா… இல்லையா,வேறு ஏதாவது உருப்படியான சமாச்சாரம் உள்ளதா? என்றெல்லாம் கவலையேபடாமல், கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி, வரை முறை இல்லாத விளம்பரம் மூலம் அந்தப் படத்தை வெற்றிப்படம் என்று காட்டும் அடாவடிக்கு இன்று தமிழ் சினிமாவே அடிமைப்பட்டுக் கிடக்கிறது.


சன் நெட்வொர்க் சானல்கள் 10 நொடி விளம்பரத்துக்கு வெளி நபர்களிடம் வசூலிக்கும் கட்டணம் பல லட்சங்கள். இந்தத் தொகையை, அவர்கள் வாங்கி விற்கும் படத்துக்கு செய்யும் விளம்பர எண்ணிக்கைக்கேற்ப கணக்கிட்டுப் பாருங்கள்… சன் பிக்சர்ஸ் ரிலீஸ் படங்களின் உண்மையான வசூல் தெரிந்துவிடும்.


எந்தப் படமாக இருந்தாலும் சன் பிக்சர்ஸின் ‘வெற்றிப்படம்’ என்ற லேபிளையும் சேர்த்து ஒட்டித்தான் விளம்பரமே செய்கிறார்கள். அப்படியெனில் வெற்றி என்ற சொல்லுக்கோ, காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வைத்துள்ள கருத்துக்கோ மரியாதையே இல்லையா?


இதையெல்லாம் விட கொடுமை, விருப்பு வெறுப்பு இல்லாமல், மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய செய்திகளில் கூட, சன் பிக்சர்ஸ் படங்கள் பற்றிய வெற்றிச் செய்திகள்தான். அதுவும் தலைப்புச் செய்தியாக!


செய்தி ஒளிபரப்புக்கென வாங்கும் அனுமதியை எந்த அளவு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் பாருங்கள்…


ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை செய்தியாகச் சொல்கிறோம் என இவர்கள் வாதிடுவார்களேயானால், தமிழில் வெளியாகும் எல்லா படங்களின் ரிசல்டையும் இதே பரபரப்பு ப்ளஸ் முக்கியத்துவத்தோடு சொல்லலாமே!


காதலில் விழுந்தேன் படத்தின் முதல் நாள் காட்சியில், கிட்டத்தட்ட பாதிப் படத்திலேயே கால்வாசி ரசிகர்கள் திட்டியபடி எழுந்து சென்ற காட்சியைக் கண்ணால் பார்த்தேன். வெளியில் போய் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநரை இங்கே எழுத முடியாத அளவு வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டுப் போனார்கள் ரசிகர்கள். ஆனால் வெகுஜன ஊடகமான சன் அந்தப் படம் வெற்றி என்று காட்ட அப்படி மெனக்கெட்டது.


அதன் பிறகு ரிலீஸ் பண்ண எல்லா படங்களுக்கும் இதே உத்திதான். தீ என்ற ஒரு குப்பைப் படத்தைக் கூட மெகா ஹிட் படம் என்றே வர்ணித்தார்கள். அது என்ன கருமமோ தெரியவில்லை… இவர்கள் வாங்குவது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி, சிக்கான(Sick) படங்கள்தான் (அயனை மட்டும் இதில் சேர்க்க முடியாது!).


இதற்கு சிகரம் வைத்தது போல அமைந்திருக்கிறது இப்போது விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வேட்டைக்காரன் படம் குறித்து சன் செய்யும் பொய்ப் பிரச்சாரங்கள்.


இந்தப் படம் குறித்து மக்கள் ஒருமனதாகச் சொன்ன, சொல்லி வரும் தீர்ப்பையே அழித்து எழுத நினைக்கிறது சன்.


சாதாரணமாக பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களைக் கூட விட்டுவிடலாம்… அவர்களின் தராசு தடுமாறுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் காசு கொடுத்து மெனக்கெட்டு பார்த்துவிட்டு பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பதிவர்களின் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக சொல்லும் தீர்ப்பைக் கூட பொய் என்கிறதா சன்?


எனக்குத் தெரிந்து படம் வெளியாகி 1 மணி நேரத்துக்குள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று புளுகப்பட்ட ஒரே படம் இந்த வேட்டைக்காரனாகத்தான் இருக்கும். இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் எம்ஜிஆர், ரஜினி, அமிதாப் படங்களுக்குக் கூட இப்படி ஒரு Verdict, அதுவும் அத்தனை மின்னல் வேகத்தில் தரப்பட்டதில்லை.


அட, ஒரு சினிமாவை பார்த்து முடிக்கவே 2.30 மணி நேரமாகுமே… இவர்களோ, வேட்டைக்காரன் படம் காலை 11.30 மணிக்கு வெளியானதென்றால், இவர்கள் அடுத்த ஒரு மணிநேரத்தில் தங்கள் செய்திகளில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. வெற்றி வெற்றி என்று.


அன்று மாலையே விஜய் ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் வெற்றி’ என்று பேட்டியெல்லாம் தருகிறார். தங்கள் பொய்களை தாங்களே தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டதன் விளைவு இது.


விஜய் வெற்றி பெறுவதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதுவும் தன்னை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்று கூறிக் கொள்ளும், அவர் படங்களையே திரும்பத் திரும்ப காப்பியடிக்கும் விஜய் தாராளமாய் ஜெயிக்கட்டும். ஆனால் அதில் குறைந்தபட்ச ஒரு நேர்மை, யோக்கியத் தன்மை வேண்டாமா?


சொல்வது பொய் என்று தெரிந்தே அந்தப் பொய்யை மெய்யாக்கிக் காட்ட முயலும் சன் டிவியின் இந்தப் போக்கு, சமூகத்தின் நோயாக மாறி விடக்கூடாதே என்பதற்காகவே இந்த கட்டுரை.


குறிப்பு:

சன் பிக்சர்ஸ் தயாரிப்புதான் எந்திரன் படமும். இந்த அலசல் அதற்கும் பொருந்துமா என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வரக்கூடும். அவர்களுக்காக இந்த பதில்…


நிச்சயம் எந்திரன் படத்துக்கு இப்படிப்பட்ட நிலை வராது. ரஜினியின் எந்தப் படமும் பொய்ப் பிரச்சாரத்தில் ஓட்டப்பட்டவை அல்ல. வெற்றியோ தோல்வியோ… அவரது படங்களின் ரிசல்டை யாரும் மறைக்கவோ திசை திருப்பவோ முடியாது!
நன்றி
தமிழ் சாரல்

முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?

பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்

முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)

காபா என்பது மனித சமுதாயம் ஏக இறைவனை வணங்குவதற்கு கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அதை நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமது தொழுகையின் போது நோக்க கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்பதால் தான் முஸ்லிம்கள் அதை நோக்கி தொழுகிறார்கள். ஆனால் காபா என்ற அக்கட்டடத்தைத் தொழவில்லை. இதற்கு முக்கியமான ஒரு வரலாற்று சம்பவம் விளக்கமாக இருக்கிறது.

மக்கா வெற்றியின் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இதே காபாவின் மேல் நின்று தொழுகைக்கான அழைப்பை விடுக்க பிலால் எனும் நபித்தோழரைப் பணிக்கிறார்கள். அவர் அதன் மேல் நின்று தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார். தாம் வணங்கக் கூடிய ஒன்றின் மீது யாரும் ஏறி நிற்க மாட்டார்கள். முஸ்லிம்கள் காபாவை வணங்குவதாகத் தவறாக எண்ணுபவர்கள், எவராவது தான் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பாரா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டால் இதற்குரிய விடை கிடைத்துவிடும்.

இன்றைக்கும் கூட நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் இடம் நிறைந்து விடும் சூழலில் முஸ்லிம்கள் பள்ளியைச் சுற்றியுள்ள வெளி இடங்களில் நின்று தொழுவதைக் காணலாம். அதற்காக அவர்கள் பள்ளிவாசலை வணங்குகிறார்கள் என்று அர்த்தமில்லை. அதே போன்றே காபா எனப்படும் உலகின் முதல் பள்ளிவாசலுக்குள் போதுமான இடமில்லாத சூழலில் காபாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழுகிறார்கள்.

இது தவிர முஹம்மது (ஸல்) அவர்களும் அவருடைய தோழர்களும் அதனுள் சென்று தொழுதும் உள்ளார்கள். ஆக தொழுகையின் போது உலக மக்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு திசையை உலகின் எப்பகுதியிலிருந்தும் நோக்க ஏவப்பட்டுள்தால் முஸ்லிம்கள் காபாவை நோக்கித் தொழுகிறார்களே தவிர அதையே தொழவில்லை.

இரண்டாவதாக ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல் சுவனத்திலிருந்து வந்துள்ள ஒரு பொருள் என்பது முஸ்லிம்களின் மற்றொரு நம்பிக்கை. இதை முஹம்மது (ஸல்) அவர்கள் தம் கைகளால் தொட்டுத் தடவி முத்தம் இட்டுள்ளார்கள். ஆனாலும் இதை வணங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதைத் தொடவில்லையென்றாலும் முத்தமிடவில்லையென்றாலும் ஹஜ் வணக்கம் நிறைவேறிவிடும்.

மேற்கண்ட பத்திகளில் சொல்லப்பட்டவற்றை ஆய்ந்து நோக்கினால் முஸ்லிம்கள் காபா என்ற கட்டிடத்தையோ அதில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லையோ வணங்கவில்லை என்பது விளங்கும். (எப்படி ஒரு பிற நாட்டுப் பொருளை, அல்லது சந்திரனில் இருந்து பெற்ற கல்லையும் மண்ணையும் மனிதர்கள் ஆர்வத்துடன் அணுகுகிறார்களோ அதே போல் தான்) சுவனத்தின் ஒரு பொருளை இறைத்தூதர் அவர்கள் தொட்டுள்ளார்கள், முத்தமிட்டுள்ளார்கள் என்பதால் முஸ்லிம்கள் முத்தமிடுகின்றனரே தவிர அதை வணங்கவில்லை என்பதே உண்மை.

மேலும்,

உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ''நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்'' என்றார்கள். (புகாரி 56வது அத்தியாயத்தில் 675வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இரண்டாவது கலீஃபாவாகிய உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதில் முஸ்லிம்களின் கருப்புக்கல் குறித்த முஸ்லிம்களின் நோக்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணம் பொதிந்துள்ளது.
மேலும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஒன்றாகிய தவாஃப் (வலம் வருதல்) என்பதை முஸ்லிம்கள் ஏழு முறை சுற்றிவரவும் அதை இந்தக் கல்லினை அடையாளமாகக் கொண்டே துவக்கவும், ஒவ்வொரு சுற்றை முடிக்கவும் ஏவப்பட்டுள்ளனர். கூட்டம் காரணமாகக் கருப்புக் கல்லினை நெருங்கி முத்தமிட இயலாதவர்கள், தொலைவில் இருந்தவாறே கருப்புக் கல்லினை நோக்கி சைகை செய்துவிட்டு தங்களின் வலம் வருதலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி உள்ளது. இயலாத சூழலில் கருப்புக் கல்லைத் தொடாமலேயே கூட ஹஜ்ஜைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே காபாவையோ, ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லையோ அல்லது, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையோ அவர்கள் அடக்கப்பட்டுள்ள மதீனா எனும் பள்ளியையோ கூட வணங்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என்பதே இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையின் நிலைபாடாகும்.

இறைவனே மிக்க அறிந்தவன்.

வருகிறது மஹிந்தரா பைக்!

மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம் ஸ்கூட்டர் வரிசைக்கு அடுத்தபடியாக, அதிநவீன அம்சங்களுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டடுள்ளது.இதற்கான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், முதல் மாடல் 2010ம் ஆண்டில் அறிமுகமாகும் என்றும் அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் மிட்டல் தெரிவித்தார்.மஹிந்தராவின் புதிய ஸ்கூட்டர் மாடல்களான 'ரோடியோ' (ரூ.41,299), மற்றும் 'ட்யூரோ' (ரூ.38,299)ஆகியவற்றை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதற்காக சென்னையில் நடந்த விழாவில் மிட்டல் இத்தகவலை தெரிவித்தார்.அப்போது அவர் மேலும் கூறுகையில், 'கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்தரா நிறுவனம் 7,000ம் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.
இதில் 5,600 ஸ்கூட்டர்கள் ரோடியோ, ட்யூரோ மாடல்கள். மற்றவை பிளைட் மாடலாகும்.தற்போது எங்களுக்கு 325 டீலர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இந்த நெட்வொர்க்கை 375ஆக விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

பிபாசாவின் நியூ இயர் ஆட்டம்

புது வருடத்தை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றன மும்பை நட்சத்திர விடுதிகள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது அறுவடைக்கான நாள். ஒரு பாடலுக்கு ஆடினாலே கோடிகளில் காசு பார்க்கலாம்.சென்ற வருடம் பிபாசா பாசுவின் நடனத்துக்குதான் மவுசு.
சஹாரா ஸ்டார் நட்சத்திர விடுதியில் நடனமாட இவர் வாங்கியது ஒன்றரை கோடி ரூபாய். கோடியில் கொடுத்தாலும் பிபாசாவுக்கு இது தகுந்த சம்பளம்தான் என்று கருதுகிறது சஹாரா நிர்வாகம்.இந்த வருடமும் சஹாராவின் புது வருட கொண்டாட்டத்தின் சென்டர் ஆஃப் அட்ரா‌க்சன் பிபாசா பாசுதான்.

ஹோட்டல் நிர்வாகம் ஊரை‌க் கூட்டி இதனை உறுதி செய்திருக்கிறது. பிபாசாவுடன் வேறு சிலரும் நடனமாட இருக்கிறார்கள். இந்தமுறை பிபாசாவுக்கு இரண்டு கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட இருக்கிறது. அவர் எந்தப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். முடிவு செய்தாலும் இறுதிவரை அது ரகசியமாக பாதுகாக்கப்படுமாம்.

சென்னை சங்கமம்' - ஜன.10இல் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

2010-ஆம் ஆண்டுக்கான "சென்னை சங்கமம்'' நிகழ்ச்சி வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தீவுத்திடலில் 10ஆம் தேதியன்று மாலை இந்நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கவிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.தீவுத் திடலில் உள்ள சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி அரங்கில் இதற்கான விழா நடைபெற உள்ளது.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தலைப்பான "பிறப்பொக்கும்'' என்ற வாசகமே `சென்னை சங்கமம்' தொடக்க விழா நிகழ்ச்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார் என்று சென்னையில் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் தெரிவித்தார்

திமிங்கிலங்களை காப்பாற்றினர் நியூசிலாந்து மக்கள்

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ஒரு கடற்கரையில் கரை ஒதுங்கித் தத்தளித்த பைலட் வகைத் திமிங்கலங்கள் நாற்பதுக்கும் அதிகமானவற்றை சுற்றாடல் பாதுகாப்பு ஊழியர்களும் தன்னார்வலர்களுமாக சேர்ந்துக்காப்பாற்றியுள்ளனர்.
சுற்றாலா வந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் டஜன் கணக்கிலானோர், இந்த திமிங்கலங்கள் நீரை விட்டு வெளியே வந்து தத்தளிக்கவிடாமல் பார்த்துக்கொண்டதோடு, தண்ணீரின் அளவு உயர்ந்த நேரத்தில் அவை மீண்டும் கடலுக்குள் நீந்திச்செல்ல உதவியுள்ளனர்.

அறுபதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின, அவற்றில் சுமார் இருபது நிலத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டிருந்தன.
திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதன் காரணம் தெளிவடையவில்லை என சுற்றாடல் பாதுகாப்பு பணியாளர்கள் கூறுகின்றனர்.

உடல் உறுப்புகள் தானம்

தலைவலியால் ரத்தக்குழாய் வெடித்து, மூளை சாவு ஏற்பட்ட சிறுமியின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள்கள் ஜெயபாரதி (15), சித்ரா (13). ஜெயபாரதி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

ஜெயபாரதிக்கு அடிக்கடி தலைவலி வந்தது. கடந்த 23ம் தேதி மீண்டும் தலைவலி அதிகமானதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற ஜெயபாரதிக்கு நேற்று காலை திடீரென மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் வெடித்தது. இதனால் மூளை செயலிழந்து மூளை சாவு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயபாரதியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர், மகளின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்து டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயபாரதியின் கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஹாலிவுட் இந்த ஆண்டு வசூல் ரூ.47,000 கோடி

நிதி நெருக்கடிக்கு இடையிலும் இந்த ஆண்டில் ஹாலிவுட் திரையுலகம் டிக்கெட் விற்பனையில் ரூ.47,000 கோடி குவித்துள்ளது. டைட்டானிக் இயக்குனரின் அவதார் திரைப்பட வசூல் ஒரே வாரத்தில் ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.ஹாலிவுட் திரைப்படத் துறையின் முக்கிய மார்க்கெட் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.

மொத்த டிக்கெட் வசூலில் இந்த நாடுகள் 75 சதவீத பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கடந்த ஓராண்டாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனினும், இந்த நிதி நெருக்கடியால் ஹாலிவுட் திரைப்படங்களின் டிக்கெட் வசூல் பாதித்ததாக தெரியவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்கள் ரூ.47,000 கோடி வசூலை அள்ளிக் கொடுத்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 139 கோடி பேர் தியேட்டர்களில் ஹாலிவுட் படங்களை பார்த்துள்ளனர். இது கடந்த ஆண்டில் தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் எண்ணிக்கையை விட 3 சதவீதம் அதிகம். 2002ம் ஆண்டு எண்ணிக்கையை விட 12 சதவீத உயர்வு இது. 2007ம் ஆண்டைவிட 2008ம் ஆண்டில் தியேட்டரில் படம் பார்த்தவர்கள் 4.5 சதவீதம் குறைந்தனர்.
ஹாலிவுட் படங்களைக் காண ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதில் தயாரிப்பாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாளத் தொடங்கியுள்ளனர். மெகா பட்ஜெட் பிரம்மாண்ட படங்கள், முப்பரிமாண படங்களை (3டி) தயாரிக்கின்றனர். இவற்றை டிவிடி, சிடிக்களில் பார்த்தால் திருப்தி ஏற்படாது என்பதால் தியேட்டரில் ரசிகர்கள் அலைமோதுகின்றனர். டைட்டானிக் வெற்றிப் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் டைரக்ஷனில் சமீபத்தில் வெளியான படம் அவதார் இதற்கு சிறந்த உதாரணம்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.1,100 கோடி வசூலைக் குவித்துள்ளது. அத்துடன், அமெரிக்காவில் மட்டும் ரூ.360 கோடி வசூலித்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

அன்புமணி ராமதாஸுக்கு அனுமதி மறுப்பு

பென்னாகரம் தொகுதிக்குள் நுழைய முயன்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று கிருஷ்ணகிரியில் வன்னியர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இதில் கல்ந்துகொள்வதற்காக அன்புமணி நேற்று தர்மபுரி வந்தார்.
இந்நிலையில், தர்மபுரியிலிருந்து நேற்று இரவு அவர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதிக்குக் கிளம்பினார்.இதனிடையே தொகுதிக்குள் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதைக் கண்காணிப்பதற்காக கெட்டூர் கிராமத்தில் காவலர்கள் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அன்புமணியின் கார், அங்கு வந்தபோது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத காரை அனுமதிக்க இயலாது என்று கூறி தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்லக்கூடாது என்று காவலர்கள் தெரிவித்தனர்.அப்போது அங்கிருந்த தாசில்தார் டியூக் பொன்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன், அன்புமணியுடன் வந்த பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கல் வீச்சிலும் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தகவலறிந்ததும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. சுதாகர், உதவி கலெக்டர் மணிவண்ணன் ஆகியோர் கெட்டூருக்கு விரைந்து சென்று பாமகவினரை அமைதிப்படுத்தினார்கள்.

தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்ல அனுமதி கேட்டு கடிதம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காலையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆகவே அனுமதிக்க வேண்டும் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அன்புமணி தொகுதிக்குள் காரில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர்.

அதிசய வாவல் மீன் சிக்கியது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து கடந்த 25ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். இவர்கள் விரித்த வலையில் அதிசய சடைவாவல் மீன் சிக்கியது.

இதன் உடல் முழுவதும் கறுப்பு, சிகப்பு கலரில் உள்ளது. மீனின் முக பகுதியில் சிறிய அளவில் 2 கொம்புகள் உள்ளன.இதுபற்றி மீனவர் சித்திரைவேல் கூறுகையில், இது அரிய வகையை சேர்ந்த மீன்.

ஆழ்கடலில் தான் வசிக்கும். இது மற்ற மீன்களை விட அதிவேகமாக நீந்திச்செல்லும் என்பதால், இதை பறக்கும் மீன் என்றும் சொல்வர். தற்போது வலையில் சிக்கிய மீன் ஒரு கிலோ எடை உள்ளது என்றார்.

ஒரு லட்ச ரூபாய் நானோ ரூ.1 கோடி கார் ஆகிறது

ஒரு லட்ச ரூபாய் நானோ காரை ரூ.99 லட்சம் செலவில் மாற்றி வடிவமைத்து ரூ.1 கோடி சொகுசு காராக மாற்றுவதில் டிசைனர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.டெல்லியை சேர்ந்த கார் டிசைனர் திலீப் சாப்ரியா. கார்களின் உள்புற வேலைப்பாடுகள், ஸ்டீரியோ, ஏசி, விளக்குகள், பம்பர் என பலவற்றை மாற்றி கூடுதல் சொகுசு செய்து கொடுப்பதில் பெயர் பெற்றவர் இவர்.

விஐபிக்களின் கார்களில் அவர்கள் விரும்பும் வகையில் கூடுதல் வசதிகளை செய்து தருவார். இப்போது உலகின் மிகவும் விலை குறைந்த காரான நானோவை விலை மதிப்பு மிக்க காராக மாற்றிக் காட்டுவதில் திலீப் ஈடுபட்டுள்ளார். காரின் 623 சிசி திறன் கொண்ட இன்ஜினுக்கு பதிலாக 1,600 சிசி திறனுள்ள இன்ஜின் பொருத்தியுள்ளார்.

அதிகபட்ச வேகத்தை மணிக்கு 100 கி.மீ.யில் இருந்து 200 கி.மீ.யாக உயர்த்தியுள்ளார். அதிநவீன கதவுகளை அமைத்து பக்கவாட்டில் திறப்பதற்கு பதிலாக வானை நோக்கி திறக்குமாறு வடிவமைத்துள்ளார். லம்பார்கினி, பெராரி போன்ற விலையுயர்ந்த கார்களில் மட்டுமே இதுபோன்ற வசதி உண்டு.மேலும் பல உள்புற மாற்றங்கள், வெளிப்புற அழகுபடுத்தல்கள் மூலம் ரூ.1 லட்சம் நானோ காரை ரூ.1 கோடி மதிப்புள்ள காராக திலீப் மாற்றி வருகிறார்.

வெளிநாட்டு ஊழியருக்கு குடும்ப விசா

ங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் பதவியை கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்குவதற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக் கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவுதி அரசு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் பதவி, பொருளாதார அடிப்படையில் குடும்பதினருடன் தங்குவதற்கான விசா வழங்கி வந்தது. இதனால், டாக்டர், இன்ஜினியர், உயர் அதிகாரிகள் மட்டுமே பயனடைந்தனர். மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர முடியாத சூழல் இருந்தது. இதனால் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தங்களுக்கும் குடும்ப விசா வழங்க வகை செய்ய வேண்டும் என்று ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய பதவியை கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்குவதற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கான வெளிநாட்டினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊழியரின் பதவியின் அடிப்படையில் குடும்ப விசா வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் இனி குடும்ப விசா வழங்கப்படும். இதற்காக, புதிய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் மனைவியின் பெயரை பாஸ்போர் ட்டில் சேர்க்க விரும்புகிறவர்கள், திருமண சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும என சவுதி அரசின் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

100 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டால் பரபரப்பு

திருச்சி அருகே போலீஸ் தடையை மீறி 100 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நேற்று நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தை மாதம் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும். முன்னதாக மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சில ஊர்களில் பயிற்சி ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் நேற்று பயிற்சி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக பெரிய சூரியூர், சின்ன சூரியூர், நவல்பட்டு உள்ளிட்ட சுற்று கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. இதுபற்றி அறிந்த நவல்பட்டு போலீசார் சென்று ஊர் பிரமுகர்களிடம் பேச்சு நடத்தினர். முறையான அனுமதி பெற்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். எனவே ஜல்லிக்கட்டை நிறுத்தும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு ஊர் பிரமுகர்கள் மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து தொழுவத்தில் இருந்து வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கூறியது: மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் பெரிய ஜல்லிக்கட்டுக்கு தான் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவோம் என்று கூறி ஊர் பிரமுகர்கள் ஜல்லிக்கட்டை நிறுத்த மறுத்துவிட்டனர்.

போதிய போலீசார் இல்லாததால் ஜல்லிக்கட்டை தடுக்க முடியவில்லை. எனினும் ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை கண்டித்துள்ளேன் என்றார்.கூத்தைப்பாரில் என்ற ஊரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற இருந்தது. தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.

ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம்

சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25).

இவர் சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார். டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில் மறைந்து ள்ளார்.

மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம் ஹபீப் தெரிவித்தார்.

தேர்தல் விவகாரம் இறுதி முடிவு :நரேஷ் குப்தா

தி.மு.க.வை சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன், சமீபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 20 ந் தேதியன்று பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நேரத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடுவது சிரமம் என்று கூறி, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல அரசியல் கட்சிகள், பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தபடி உள்ளன.


இதற்கிடையே முதல்வர் கருணாநிதியிடம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றோர், பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
பென்னாகரம் இடைத்தேர்தலும் சரி, இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களும் சரி தமிழக அரசை தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை. இப்போது பென்னாகரம் இடைத்தேர்தலையும் மாநில அரசை கலந்து ஆலோசித்துவிட்டு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. எங்களைப் பொருத்தமட்டில் தேர்தல் கமிஷன் மீது மிகுந்து மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்'' என்று பதில் அளித்திருந்தார்.


மேலும், சட்டமன்றத்தில் 6ந் தேதி இடம் பெறவுள்ள கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிடலாமா? பொங்கலின்போது ஏழைகளுக்கு, அரசு வழங்கும் இலவச வேட்டி சேலையை வினியோகிக்கலாமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளார்.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகை உள்பட பல்வேறு காரணங்களால், பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த 7 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகள் ஆகிய 11 அரசியல் கட்சிகளுடன், பென்னாகரம் தேர்தல் தொடர்பாக விவாதிக்கும் வகையில் ஒரு அவசர கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க ஆகிய 4 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நரேஷ்குப்தா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார்.


இந்த கூட்டத்தில், பென்னாகரம் இடைத்தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் விரிவான முறையில் தேர்தல் துறையினர் விவாத்தனர். இந்த கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட விஷயங்களை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் நரேஷ்குப்தாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூட்ட முடிவுல் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா,
இரு தரப்பு கோரிக்கையும் தேசிய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் கமிஷனின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.

குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா?

இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த அருளப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதித்தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

"இந்தக் குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது." (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).

3:138. "இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது ".

38:87. ''இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."

இந்த குர்ஆனுடைய போதனைகள் நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும் , ஆண்களுக்கும், பெண்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானதுதான்.

தனக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை இறைக்கட்டளைப்படி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்தியம்பியதாலேயே திருக்குர்ஆன் வார்த்தெடுக்க விரும்பும் நேரான வாழ்க்கைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அமையப்பெற்றது.
அவ்வாறு திருக்குர்ஆன் வழிகாட்டுதல்படி ஒரு சமுதாயம் அமைப்பெற்ற பிறகு, அதனை அதனால் உருவான சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.

இறைவனை இவ்வுலகின் படைப்பாளனாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் இருக்கின்றதே தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் அதனை கொண்டு வந்த தூதரின் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அத்தூதருக்கு அருளப்பட்டது. எனவே அவ்வேதங்கள் அத்தனி சமுதாயத்திற்கு மட்டும் உரியது என்ற வாதத்தில் உண்மையுண்டு. ஆனால் அதே நேரம் திருக்குர்ஆன் தனியொரு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த அருளப்பட்டதல்ல.

மொத்த உலகமும் படைத்தவனை மறந்து கணடதையெல்லாம் வணங்கி தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரம், அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி இறைவனின்பால் மொத்த உலகையும் அழைக்க அருளப்பட்டதே இறுதி வேதமான இத்திருக்குர் ஆனாகும்.

எனவே இது தனியொரு சமுதாயம் உரிமை கொண்டாடும் வேதமல்ல. மாறாக அகிலாத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக - நல்லுபதேசமாக - அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டதேயாகும்.

இறைவன் மிக அறிந்தவன்.

பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொலைதூர ஊர்களுக்கு 80 சிறப்பு பஸ்களை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.பொங்கல் பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

ரயில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சொந்த ஊருக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களை நம்பி உள்ளனர். திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து 956 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 48 ஏசி பஸ்கள் உப்பட சொகுசு பஸ்கள் உள்ளன. இந்நிலையில் பொங்கலுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் ஏசி, சொகுசு உள்ளிட்ட பஸ்களும் அடங்கும். விரைவு போக்குவரத்து கழகத்தின் 53 மையங்களிலும், சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ்கள் பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பு இருந்து ஒரு வாரத்துக்கு இயக்கப்படும்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கலுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்ÕÕ என்றார்.

ஐடி துறையில் 50,000 பேருக்கு வேலை

தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாகவேலை வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச நிதிநெருக்கடி காரணமாக ஐடி துறையில் லட்சக் கணக்கானோர் வேலை இழந்ததுடன் புதிய வேலை வாய்ப்பும் குறைந்தது.

இப்போது நிலைமை சீரடைந்து வருவதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஐடி துறை நிறுவனங்கள் அதிக அளவில் புதிதாக ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாமியாரை கைது செய்ய வேண்டும்

தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்பவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கொடுத்த மனுவில், ‘எனக்கு வேலை தருவதாக கூறி, காபியில் மயக்க மருந்து கொடுத்து நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் பலாத்காரம் செய்து விட்டார்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க சாமியாரை போலீசார் அழைத்தனர்.

ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஹேமலதா, நிருபர்களிடம் கூறியதாவது: கோர்ட் உத்தரவுபடி 18, 19ம் தேதிகளில் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவு தெரியும். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, படிப்படியாக விசாரணை நடத்தி வருவதாக கூறுகிறார். போலீசார் என்னிடம் உடனே விசாரணை நடத்தினர்.

ஆனால் சாமியாரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கை திசை திருப்ப சாமியார் முயற்சிக்கிறார். அவரை பிடித்து விரைவில் விசாரணை நடத்தி, கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு ஹேமலதா கூறினார்.

காட்டி கொடுத்தது பேஸ்புக்’

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இரண்டு பெண்களை திருமணம் செய்த சீன மனிதரைÔபேஸ்புக்Õ சமூக இணைய தளம் போலீசில் சிக்க வைத்தது.சீனாவை சேர்ந்தவர் சாங்.

இவர் 2005ல் ஜிஜியாங் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு, மெக்சிகோவில் வேலைக்குச் சென்றார். அங்கு சீனத் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்த பெண்ணை சந்தித்தார். தனக்கு இன்னும் மணமாகவில்லை என்று கூறி, அந்தப் பெண்ணை திருமணம் செய்தார். அவரை சீனா அழைத்து வந்து பெய்ஜிங்கில் குடித்தனம் வைத்தார்.

மெக்சிகோவில் இருந்து சீனா வரும்போதெல்லாம் பெய்ஜிங், ஜஜியாங் நகரங்களுக்கு சென்று இரண்டு மனைவிகளுடன் தங்குவார்.ஒரு மனைவியிடம் இருந்து இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும்போது, வேலை காரணமாக மெக்சிகோ திரும்புவதாக பொய் கூறுவார். இப்படியே ரகசியமாக இரண்டு மனைவிகளுடன் சாங் வாழ்ந்து வந்தார்.

அதற்கு பேஸ்புக் நெட்வொர்க் இணைய தளம் மூலம் சிக்கல் எழுந்தது. தனது குடும்ப விவரங்களை இரண்டு மனைவிகளும் பேஸ்புக்கில் வெளியிட்டனர். அதன்மூலம் நண்பர்களாகினர். அதன்பிறகு, தங்கள் திருமண படங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போதுதான் தெரிந்தது, மாப்பிள்ளை சாங், இருவரையும் வசமாக ஏமாற்றிய விஷயம். உடனடியாக முதல் மனைவி போலீசில் புகார் தர... இப்போது சிறையில் இருக்கிறார் சாங்.

கடற்கரை கிராமங்கள் கண்ணீரில் மூழ்கின

கடந்த 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 பேர் இறந்தனர்.

கடற்கரை கிராமங்களில் சுனாமி 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாகை பழைய பஸ் நிலையத்தில் உள்ள மறைமலை அடிகள் சிலையில் இருந்து துறைமுகம் வரை திமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார்.

அக்கரைப்பேட்டை சிந்தனை சிற்பி மழலையர் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 29 குழந்தைகள், மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 53 குழந்தைகள் சுனாமியில் இறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் அடங்கிய போர்டு பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மலர்களை ஏந்தியபடி வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கீச்சாம்குப்பம் சுனாமி நினைவு ஸ்தூபி வரை ஓ.எஸ்.மணியன் எம்பி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. சுனாமியில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாகை மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

இருநூறு பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட காரைக்கால் எல்லையான நண்டலாற்றில் உள்ள நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.குமரி மாவட்டம்: சுனாமி தாக்குதலில் குமரி மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 800 பேர் இறந்தனர். கல்லறைகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளும், தேவாலயங்களில் நினைவு திருப்பலிகளும் நடத்தப்பட் டன. இதில் பங்கேற்ற பெண்கள் தங்களது குழந்தைகளையும், உறவினர்களையும் நினைத்து கதறி அழுதனர். மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் கடலில் மலர் அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை.புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை கடற் கரையில் முதல்வர் வைத்திலிங்கம் அஞ்சலி செலுத்தினார். கடற்கரை கிராமங்கள் தோறும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்ததால் மக்கள் கண்ணீரில் மூழ்கி இருந்தனர்.

இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா? நிராகரிப்பாளரா?

கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ" என்பதன் பொருள் என்னவெனில் "தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள்" என்பதாகும்.
இறைவன் இவ்வுலகைப் படைத்து மனிதர்களுக்கு சிந்திக்கக்கூடிய திறனை அளித்துள்ளான். அதனால் அவனது சுதந்திரமான சிந்தனையைப் பயன்படுத்தி சத்தியம் எது என தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றவேண்டும்.
"சிந்திக்க மாட்டீர்களா?" என்றும் இறைவன் மனிதகுலத்தை நோக்கிக் கேட்கிறான். இவ்வுலகவாழ்க்கை ஒரு தேர்வைப்போன்றது, தேர்வில் வெற்றிபெறுவதற்கான வழிகாட்டிகள் இறைத்தூதர்கள். இனி ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத, அதிகமாகத் தொந்தரவு செய்கிற, தனது வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை அவன் இறுதித் தேர்வில் தேற மாட்டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித் தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யார் காரணம்? மாணவனா? ஆசிரியரா? மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை அறிவுடைய எவரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாகப் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்குப் பொறுப்பாவான்.

அதேபோலத் தான் இறைவன் நேரான வழிகாட்டலுக்கு வேதத்தையும் அதன் செய்முறை விளக்கமாகத் தூதரையும் அருளியிருக்கிறான். தூதர் வாழ்ந்து காட்டியதோடு அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்து விட்டார். இனி சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பதும் விடுவதும் மனிதச் சிந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒருமுறை தவறான வழிக்குச் சென்ற ஒரு மனிதன் அதன் உலகியல் சிற்றின்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுவானேயானால், அவனுக்கு அச்சமூட்டி செய்யப்பட்ட எச்சரிக்கைகள் மரத்தும் மறந்தும் போய்விடலாம்.
இந்த நிலையில் தான் செல்லப் போவது நரகம் தானே பார்த்துக் கொள்ளலாம் என எள்ளல் நிலைக்கு அவன் வரும் போது, இறைவன் அவன் சிந்தையை முத்திரையிட்டு விட்டதாகக் கூறுகிறான்.

இறைவன் மிக அறிந்தவன்.

தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உள்ள கலைஞர் ஜாதி தமிழகத்தை ஐந்தாவது முறையாக ஆளுகிறது. நாம் ஏன் தமிழகத்தை ஆளக் கூடாது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே வெங்கரையில் நாமக்கல் கரூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு கபிலர்மலை தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.


மாநாட்டில் பேசிய ராமதாஸ்,


தமிழகத்தில் உள்ள எல்லா ஜாதிக்கும் வெறி பிடித்து விட்டது. நமக்கு மட்டும் தான் உணர்வு உள்ளது. வன்னியர் ஜாதி தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி. 2011ல் தமிழகத்தை ஆளப்போகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அரசின் குறைகள் குறித்து நாள்தோறும் அறிவிப்பு வெளியிடுவேன். அதற்கு முதல்வர் கருணாநிதி, 2011ல் ஆளப் போகிறீர்கள். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அவர் வாக்கு பலிக்க வேண்டும்.


தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உள்ள கலைஞர் ஜாதி தமிழகத்தை ஐந்தாவது முறையாக ஆளுகிறது. மலையாளத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 10 ஆண்டு முதல்வராக இருந்தார்.


கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயலலிதா பத்து ஆண்டு முதல்வராக இருந்தார். நாம் ஏன் தமிழகத்தை ஆளக் கூடாது?.
கருணாநிதி சூழ்ச்சியால் 107 ஜாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


அதன்படி 100 இடங்களில் ஏழு இடங்கள் மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. அனைத்து ஜாதிகளையும் கணக்கெடுத்து, அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.


இடஒதுக்கீடு கொடுக்கவில்லையெனில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் 10 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். "காற்றே அசையாதே; சொல்வது வன்னியன்' என்று சொல்லும் அந்த நிலை உருவாகும் என்றார்

மணிக்கு 350 கி.மீ. போகும் ரயில்

உலகின் மிக வேகமான ரயில் சேவையை துவக்கி சீனா அசத்தியுள்ளது. குவாங்சு மற்றும் ஊகன் ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்படும் இந்த ரயில், மணிக்கு சராசரியாக 350 கி.மீ., வேகம் செல்லக்கூடியதாகும். 1069 கி.மீ., தூரம் கொண்ட இந்த ரயில் நிலையங்களை, வெறும் 3 மணி நேரத்தில் ரயில் கடக்கிறது.

முன்னதாக இதற்கு ஏழரை மணிநேரம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் இது போன்ற ரயில்கள் ஜப்பான் (243கி.மீ/ம), பிரான்ஸ் (277கி.மீ/ம) ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன.

போ‌ப் ஆ‌ண்ட‌வ‌ர் ‌மீது பெ‌ண் தா‌க்குத‌ல்

கி‌றி‌ஸ்தும‌ஸ் ‌தின‌ச் ‌சி‌ற‌ப்பு ‌பிரா‌த்தனை‌யி‌ன் போது போ‌ப் ஆ‌ண்டவ‌ர் ‌மீது ஒரு பெ‌ண் தா‌க்குத‌ல் நட‌த்‌தினா‌ர். இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்த போ‌ப் ஆ‌ண்டவ‌ர் 16ஆ‌ம் பெனடி‌க்‌ட், சுகா‌க‌ரி‌த்து‌க் கொ‌ண்டு எ‌ழு‌ந்து ‌பிரா‌த்தனை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.இ‌ன்று ‌கி‌றி‌ஸ்ம‌‌ஸ் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்படுவதை மு‌ன்‌னி‌ட்டு வாடிக‌னி‌ல் உ‌ள்ள தேவாலய‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பு ‌பிரா‌த்தனை‌க்கு ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தது.‌சி‌ற‌ப்பு ‌பிரா‌த்தனை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக போ‌ப் 16ஆ‌ம் பெனடி‌க்‌ட் தேவாலய‌த்‌தி‌‌ற்கு‌ள் ‌வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது, ‌பிரா‌‌ர்‌த்தனை செ‌ய்ய வ‌‌ந்‌திரு‌ந்த பொது‌ம‌க்க‌‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து ஒரு பெ‌ண் பா‌ய்‌ந்து வ‌ந்து பெனடி‌க்‌ட் ‌மீது மோ‌தினா‌ர். இ‌தி‌ல் ‌நிலை குலை‌ந்து போன பெனடி‌க்‌ட் ‌கீழே ‌விழு‌ந்தா‌ர். உடனடியாக சுகாக‌ரி‌த்து‌க் கொ‌ண்டு எழு‌ந்து 16‌ஆ‌ம் பெனடி‌க்‌ட் ‌பிரா‌‌ர்‌த்தனை செ‌ய்ய செ‌ன்றா‌ர்.ஆனா‌ல் அவருட‌ன் வ‌ந்த ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த பா‌தி‌ரியா‌ரு‌க்கு கா‌லி‌ல் எலு‌ம்பு மு‌றிவு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.தடையை ‌மீ‌றி போ‌ப் ‌மீது மோ‌திய பெ‌ண்‌ணிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.

தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்போவதாக தா‌லிபா‌ன் அ‌றி‌வி‌ப்பு

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தானு‌க்கு கூடுத‌ல் படைகளை அனு‌ப்ப‌ப் போவதாக அமெ‌ரி‌‌க்கா அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்போவதாக பய‌ங்கரவாத அமை‌ப்பான தா‌லிபா‌ன் ‌அ‌றி‌வி‌த்து‌ள்ளது. அமெ‌ரி‌க்க‌ர்களு‌க்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த உ‌ள்ளதாக தா‌லிபா‌ன் அமை‌ப்‌பி‌ன் தளப‌தி வ‌லியூ‌ர் ரஹ‌்மா‌ன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். தனது சக கூ‌ட்டா‌ளிகளுட‌ன் தோ‌ன்‌றி கூ‌றியு‌ள்ளா‌ர்.
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தோ‌‌ற்று ஓடுவதாலேயே, ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குதலை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த கூடுத‌ல் படைகளை அனு‌ப்ப‌ப் போவதாக அமெ‌ரி‌க்கா அற‌வி‌‌‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் வ‌லியூ‌ர் ரஹ‌‌்மா‌ன் கூ‌றினா‌ர்.எனவே, பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் இரு‌ந்து ஆ‌யிர‌க்கண‌க்கான தா‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திகளை ஆ‌ப்கா‌னி‌ஸ்தானு‌க்கு அனு‌ப்‌பி, அ‌ங்கு அமெ‌ரி‌க்க‌ப் படை‌யினரு‌க்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌‌விர‌ப்படு‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றினா‌ர்.
ஒசாமா ‌பி‌ன் லேட‌ன் இற‌ந்து ‌வி‌ட்டதாக வரு‌ம் தகவ‌ல்க‌ளி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை. அவ‌ர் உ‌யிருட‌ன் நலமாகவே உ‌ள்ளா‌ர். அமெ‌ரி‌க்க‌ர்களு‌க்கு எ‌திரான போ‌ரி‌ல் ஈடுபடு‌ம் ‌வீர‌ர்களு‌க்கு ஆலோசனைகளு‌ம், ஊ‌க்கு‌வி‌ப்பையு‌ம் அ‌ளி‌த்து வரு‌கிறா‌ர் எ‌‌ன்று‌ம் அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

பாகிஸ்தானுக்கு ரூ 6 ஆயிரம் கோடி நிதி உதவி

சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்) பாகிஸ்தானுக்கு உடனடியாக வழங்குவதற்காக ரூ.6 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.இதோடு சேர்த்து பாகிஸ்தான் இந்த நிறுவனத்திடம் இருந்து இதுவரை மொத்தம் 32 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி உதவி பெற்று உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 40 ஆயிரத்து 550 கோடி ரூபாய் நிதி வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல் அளித்தது.பாகிஸ்தானின் பொருளாதார செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவி பல கட்டங்களாக வழங்கப்படுகிறது.

ஈரானில் பின்லேடன் மனைவி, குழந்தைகள் கைது

ஈரானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் ஒரு மனைவியும், சில குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.நியூயார்க் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் அங்கு இருந்து தப்பி, ஈரான் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.இந்நிலையில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தெஹ்ரானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஈரான் அரசு கைது செய்து, ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து இருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

எலியால் தாமதமான ரியாத் விமானம்

விமானத்துக்குள் எலி புகுந்ததால், டெல்லி யில் இருந்து ரியாத்துக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் 24 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து திங்கள் கிழமை இரவு 8.20க்கு ரியாத் நோக்கி புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானம் தயாராகிக் கொண்டிருந்தது.


அப்போது, உணவுப் பொருட்களை உள்ளே எடுத்துச் சென்ற ஊழியர்கள் விமானத்துக்குள் எலி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.


உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை முழுவதுமாக அடைத்து புகைமூட்டத்தை ஏற்படுத்தி எலியை கொன்று அப்புறப்படுத்தினர்.


இப்பணிகள் காரணமாக விமானம் தாமதமானது. நேற்று மாலை 6.55 மணிக்கு ரியாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

கர்கரே அணிந்து இருந்தபுல்லட் புரூப் ஜாக்கெட்டைகுப்பை தொட்டியில் வீசினேன்!

மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட போது கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டை பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை தொட்டியில் போட்டதாக மருத்துவமனை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேவும் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட், அவர் இறந்த பிறகு காணாமல் போனது. அது பெரிய சர்ச்சையானது.

புல்லட் புரூப் ஜாக்கெட்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அது தரமற்றதாக இருந்ததால்தான் குண்டுகள் துளைத்து கர்கரே இறந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த கர்கரேக்கு ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதால், ஜாக்கெட் அங்குதான் காணாமல் போயிருக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளி தினேஷ் லால்ஜி கட்டார் (35) நேற்று அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நவம்பர் 27ம் காலை ஆபரேஷன் தியேட்டரை சுத்தம் செய்ய சென்றேன். அங்கு பயன்படுத்தப்பட்ட மருந்து பொருட்களும், ஊசிகளும் நிறைய கிடந்தன. கூடவே ஒரு ஜாக்கெட்டும் கிடந்தது.

எல்லாவற்றையும் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு விட்டு தியேட்டரை சுத்தம் செய்தேன். பிறகு, அந்த பிளாஸ்டிக் பையை தூக்கிச் சென்று குப்பை கிடங்கில் போட்டேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

ஒபாமாவை முந்தினார் பிரிட்னி

இன்டர்நெட் தேடுதல் தளங்களான கூகுள், யாகூ, எம்எஸ்என் உட்பட பலவற்றிலும் அமெரிக்கர்கள் இந்த ஆண்டில் யாரைப் பற்றிய தகவல்கள், படங்களை அதிகளவில் தேடினார்கள் என்பதை கான்டக்ட் மியூசிக் என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது.

அதில் அதிபர் பராக் ஒபாமாவை விட இளம் பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் முன்னணி பெற்றார். 1998ல் Ôபேபி ஒன்மோர் டைம்Õ என்ற தனது பாப் இசை ஆல்பம் மூலம் பிரிட்னி ஸ்பியர்ஸ் பிரபலம் ஆனார்.

பிறகு, அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாப் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றார். பிரிட்னிக்கு அடுத்த இடத்தில் அதிபர் ஒபாமா இடம்பெற்றுள்ளார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் 3வது இடம் பிடித்தார்.

வெற்றி

திருச்செந்தூர், தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் .இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணை விட 46861 வாக்கு அதிகம் பெற்றார் . விவரம் வருமாறு , திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் 75223 ஓட்டுக்கள் , அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணன் 28362 ஓட்டுக்கள் ,(தேமுதிக) வேட்பாளர் கோமதி கணேசன் 4086 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

அனைத்துக் கடன்களையும் ஒரே தவணையில் செலுத்துகிறது துபாய் வேர்ல்ட்!

கடன் கொடுத்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் முழுமையாக அதைத் திருப்பிக் கொடுக்க துபாய் வேர்ல்ட் குழுமம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு நிறுவனம், திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது.


இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.
இந்த நிலையில் துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.


துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.


துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளனர்.


விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டனாமோ சிறையில் கொடூரம்!!!

குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சோமாலியா நாட்டை சேர்ந்த ஒருவர் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.

சோமாலிய நாட்டைச் சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே என்ற அந்த இளைஞர் கூறியதாவது: சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்னை பாகிஸ்தானில் வைத்து கைது செய்த அமெரிக்கப் புலணாய்வு அதிகாரிகள் அங்கு வைத்து கொடுமைப்படுத்தி விசாரித்தனர். அதன் பிறகு தன்னை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று அங்கு கடுமையாக சித்ரவதை செய்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் உள்ள குவாண்டானாமோ கொடுஞ்சிறைக்கு கொண்டு சென்று அங்கு தன்னை தனிமைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கூறியுள்ளார். அங்கு இருந்து வெளியே வந்தது கல்லறையில் இருந்து வந்தது போல இருப்பதாகவும் மொஹமது சுலைமைன் தெரிவித்தார்.


இதைப்போன்று அச்சிறையிலிருந்து வெளியான பலர் கூறியுள்ளனர் என்பதும், இவர் மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் அமெரிக்கா இதுவரை நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமை‌ச்ச‌ர் கோ.சி.மணி அப்போலோவில் அனுமதி

கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி உட‌ல்நல‌க்குறைவு காரணமாக செ‌ன்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப‌ட்டு உ‌ள்ளா‌ர். செவ்வாய் அதிகாலை 3 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நல‌க்குறைவு ஏற்பட்டது.

அவர் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

விலைவாசியை கட்டுப்படுத்த 'ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்'- தமிழக அமைச்சரவையில் முடிவு

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை தடுக்கவும், முக்கிய பயிர்களின் உற்பத்தித் திறனை பெருக்கவும் தேவையான வழிமுறைகளை ஆராய சிறப்பு முனைப்புக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைக்க தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று கூடியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.


தொழில் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை, வணிக வரித்துறை, உணவுத்துறை, வருவாய் மற்றும் வருவாய் நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகம் சிறுதொழில்கள் ஆகியவை உள்பட 13 துறைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


பின்னர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு:

கடந்த 2008ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட அரியலூர், கடலூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருவாரூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நிலவரி, தண்ணீர்த் தீர்வை, தலவரி போன்றவற்றை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.இந்த வகையில் ரூ. 21 கோடியே 34 லட்சத்து 15 ஆயிரத்து 256 ரூபாயை தள்ளுபடி செய்ய தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் வடக்குசேத்தி கிராமத்தில் பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு மகளிர் பொறியியல் கல்லூரி கட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,32,600 என்ற விலையில் 40 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு முனைப்புக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைக்கப்படும். இக்குழுவில் உணவு, விவசாயத் துறை அதிகாரிகள் மட்டுமல்லாது விவசாயப் பல்கலை துணைவேந்தரும் இடம் பெறுவார்.


நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேவையைவிட குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படும் பிற முக்கிய பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கான வழிமுறைகள் போன்றவற்றை ஆராய்ந்து ஒரு நீண்டகால தீர்வை இக்குழுவிடம் இருந்து பெறுவதென்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் ‌கிட‌ந்த 5 கிலோ க‌ஞ்சா

செ‌ன்னை மெ‌ரினா கட‌ற்கரை‌‌யி‌ல் கே‌‌ட்பார‌‌ற்று ‌கிட‌ந்த ஐ‌ந்து‌ ‌கிலோ க‌ஞ்சாவை காவ‌ல்துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மெ‌ரினா க‌ாவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் முகமது நாச‌ர் தலைமை‌யி‌ல் காவல‌ர்க‌ள் இ‌ன்று காலை ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.அ‌ப்போது கா‌ந்‌தி ‌சிலை ‌பி‌ன்புற‌ம் கட‌ற்ரை மண‌லி‌ல் ஒரு பெ‌ரிய ‌பிளா‌ஸ்டி‌க் பொ‌ட்டல‌ம் ‌கிட‌ந்ததை காவ‌ல்துறை‌யின‌ர் க‌ண்டெடு‌த்து ‌பி‌ரி‌த்து‌ பா‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

அ‌தி‌ல் 5 கிலோ க‌ஞ்சா இரு‌ந்ததை தொட‌ர்‌ந்து அதனை அவ‌ர்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்து வழ‌க்கு‌ப்ப‌தி‌ந்து ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. பொதுசெயலாளர் அமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 20.1.2010 அன்று நடைபெற உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 26.12.2009 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்கு ஒரு வாரம் லீவு… செலவைக் குறைக்க யாஹூவின் புதுமுயற்சி!

வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை உலகெங்கும் உள்ள தங்களின் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் 700 பேரை பணிநீக்கம் செய்த யாஹூ, தற்போது செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்த விடுமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.

அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.


சர்வதேச பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் சமயங்களில் பாதிப்பில் இருந்து தப்ப, யாஹூ மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை, செலவு குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்த கட்டாய விடுமுறை திட்டம்.

யாஹூ மட்டுமல்லாது, அடோப், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை கட்டாய விடுப்பு அறிவித்துள்ளன.


‘மந்தமான சமயங்களில் அலுவலகத்தை மூடி, பணியாளர்களையும் சுதந்திரமாக விடுவதன் மூலம், அலுவலக நடைமுறை செலவுகள் குறைவதோடு, பணியாளர்களை ரீ-சார்ஜ் செய்தது போலவும் ஆகும்’ என்று யாஹூ செய்தித் தொடர்பாளர் டானா லெங்கீக் விளக்கம் தந்துள்ளார்.
இந்த ஒரு வார கால விடுமுறையை அமெரிக்காவில் உள்ள யாஹூ பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.


தங்களின் சம்பளமில்லா விடுமுறை நாள்களை கழித்துக் கொள்ள இது உதவும் என்றும், நடைமுறையில் நிறுவனத்துக்கும் செலவு கணிசமாக குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருள் வழங்காத குடும்ப அட்டைகள்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரம்பூர், திருவொற்றிïர், வில்லிவாக்கம், ஆவடி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளை 100 சதவீதம் வீடு, வீடாகச் சென்று தணிக்கை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையின்போது இல்லாத குடும்பங்கள் மற்றும் முகவரி மாறிய குடும்பங்களின் ரேஷன் கார்டுகளுக்கு பொருள் வழங்கல் நிறுத்தம் ஆணைகள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு அங்காடியில் 21-12-2009 அன்று முதல் விளம்பரப்படுத்தப்பட உள்ளது.

இந்த பொருள் நிறுத்தம் ஆணைகள் தொடர்பாக முறையீடு செய்ய ஏதுவாக இதுகாறும் பொருள் பெற்று வந்த ரேஷன் கடைகளிலேயே முறையீடு படிவம் அச்சடித்து இலவசமாக வழங்கப்படுகிறது.

அந்த படிவங்களை பெற்று அதில் விவரங்களை பூர்த்தி செய்து ரேஷன் கார்டு நகல் மற்றும் இருப்பிட ஆதாரம் (வாக்காளர் அடையாள அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், ஓட்டுநர் உரிம நகல், பாஸ்போர்ட் நகல், எரிவாயு சிலிண்டர் நிரப்பு ரசீது, அஞ்சல் துறை வழங்கும் இருப்பிட அடையாளஅட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல்) ஒன்றின் நகலை இணைத்து ரேஷன் கடையிலேயே கொடுத்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

முறையீடு மனுக்கள் 31-01-2010 தேதிக்குள் அங்காடியில் கொடுக்கப்பட வேண்டும். அங்காடியில் முறையீடு மனு அளித்த ரேஷன் கார்டுகளுக்கு அவர்களது முறையீடு மீதான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து பொருள் வழங்கப்படும்.

இந்த மனுக்கள் மீது நேரடி விசாரணை செய்து உண்மையில் வசிப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ரேஷன் கார்ட்டில் உரிய முகவரி மாற்றம் செய்து கொடுத்து தொடர்ந்து பொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தேதிக்குள் முறையீடு செய்யப்படாத ரேஷன் கார்டுகள் வசிக்காத போலி ரேஷன் கார்டுகள் என கருதி ரத்து செய்யப்படும். எனவே உண்மையான ரேஷன் கார்டுதாரர்கள் எவரும் இது தொடர்பாக கவலை அடையத் தேவையில்லை. மேலும் பொருள் நிறுத்தம் தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம் என ரேஷன் கார்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கார்டுதாரர்கள் வசதிக்காக பொருள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கார்டுகள் குறித்த விவரம் http://www.consumer.tn.gov.in/cardstatus இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது ரேஷன் கார்டு எண்ணை மட்டும் பதிவு செய்தால் அந்த ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றுள்ளதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். தங்களது ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றிருந்தால் இதே இணையதளத்தில் உள்ள முறையீட்டு மனுவின் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து மனுவினை பூர்த்தி செய்து இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் நேரில் கொடுத்து ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம்.

இது பற்றி சந்தேகங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

அதன் விவரம் வருமாறு:-

துணை ஆணையர் (நகரம்) தெற்கு, போன்: 28551026, செல்: 94450 00160.
தியாகராயநகர் போன்: 28156674, செல்: 94450 00161.
பரங்கிமலை, போன்: 22604411, செல்: 94450 00163.
சைதாப்பேட்டை, போன்: 24328198, செல்: 94450 00165.
சோழிங்கநல்லூர், போன்: 24502575, செல்: 94450 00402.
துணை ஆணையர் (நகரம்) வடக்கு, போன்: 28551028, செல்: 94450 00152.
பெரம்பூர், போன்: 25593050, செல்: 94450 00154.
வில்லிவாக்கம் போன்: 26171451, செல்: 94450 00157.
திருவொற்றியூர், போன்: 25992828, செல்: 94450 00159.
ஆவடி, போன்: 26375560, செல்: 94450 00403.
மாநில நுகர்வோர் சேவை மையத்தின் போன்: 28592828.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.... நாளைக்கும் லீவு !

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார். விடுமுறைக்கான மாற்று பணிநாள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (23.12.2009) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்

பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன், “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.
இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.
அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனே, ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.

செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்

மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை.
இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று சமரசம் செய்தனர். அந்த வாலிபரை கண்டிக்காமல் சென்றுவிட்டனர்.

சக பயணிகளும் யாரும் அந்த பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனால் தைரியமான அந்த வாலிபர் மீண்டும் சில் மிஷத்தில் ஈடுபட்டார்.
அதோடு அந்த பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டவும் செய்தார். பதிலுக்கு அந்த பெண்களும் திட்டினார்கள். அந்த வாலிபரிடம் நீ பேசியது தப்பு என்று மன்னிப்புக் கேள் என்றனர்.

திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதோடு அந்த பெண்களை மேலும் இழிவாகப் பேசினார். இது அந்த பெண்களை கொதித்தெழ வைத்தது. அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
வாலிபரை அவர்கள் சூழ்ந்து கொண்டு துவைத்து எடுத்தனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து அந்த வாலிபரை தாக்கினார்கள்.

“ஜெய்ப்பூரில் விமானம் இறங்கியதும் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று அந்த வாலிபர் மீசையை முறுக்கினார். அதற்கும் அந்த பெண்கள் பயப்படாமல் அடித்து உதைத்தனர்.
ஜெய்ப்பூரில் விமானம் தரை இறங்கிய பிறகும் அந்த பெண்களுக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு நீடித்தது. அந்த வாலிபர் மீது பெண்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த பெண்கள் புகாரை வாபஸ் பெற்றதால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.