ரிமோட் தெரு விளக்கு- முதல்முறையாக டெல்லியில் அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக டெல்லி நகர வீதிகளில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக டெல்லியில் சுமார் 101 கி.மீ தொலைவுக்கு 52 சாலைகளில் 2 ஆயிரத்து 235 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

லோதி சாலை, பீஷ்ம பிதா மார்க், ஜவஹர்லால் நேரு மார்க் உள்ளிட்ட சாலைகளில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.மேஹ்ரா இன்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மொபைல் போன் சேவைக்கு பயன்படுத்தப்படும் ஜிபிஆர்எஸ் மற்றும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ், பிபி பிராஜக்ட் லிட், ஸ்வேகா பவர் டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின் மூலம், தெருவிளக்குகளை குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்த படியே இயக்க இயலுவதோடு, எரிசக்தி சேமிப்பும், கார்பன் மாசு கட்டுப்படுவதும் சுலபமாகும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: