கிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி ஓட்டம்

கிராம திருவிழாவில் நடிகை சங்கவி ஆட்டம் போடாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர். இதனால் திருவிழாவை விட்டு ஓட்டம் பிடித்தார் சங்கவி.

பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை சங்கவியின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனவே ஏராளமான ரசிகர்கள், கிராம மக்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் இவர்களைக் கட்டுப்படுத்தப் போதிய போலீஸ் இல்லை. எனவே விழாவின் துவக்கத்திலிருந்தே பெண்களிடம் சில இளைஞர்கள் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

இந்த நிலையில் சங்கவி நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, நடனமாடாமல், ஒப்புக்கு கைகளை மட்டும் ஆட்டி பேசிவிட்டு மேடையை விட்டிறங்கிச் சென்றார். இதனால் கடுப்பான ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர்.

ஒரு சில போலீசார் இதைக் கட்டுப்படுத்த முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்கியது ரசிகர் கூட்டம் . பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்ற வேண்டி வந்தது.

சங்கவியின் வாகனத்தை வழிமறிக்கவும் ஒரு கும்பல் முற்பட தப்பி்த்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தார் அவர்.

அதன் பிறகு மெல்ல மெல்ல கலாட்டா அடங்கியது.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!

இமாசலபிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டதையடுத்து, போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

நித்யானந்தாவுக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.

மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா

மிஸ் இந்தியா போட்டியில் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த 20 வயது இளம் புயல் கிருத்திகா பாபு பங்கேற்றுள்ளார்.
பேன்டலூன் மிஸ் இந்தியாப் போட்டியில் 18 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் கிருத்திகா பாபுவும் ஒருவர். 20 வயதான இவர் பெங்களூர் மெளன்ட் கார்மல் கல்லூரி மாணவியாவார். பெங்களூரில் வளர்ந்தாலும் இவர் பிறந்தது மதுரையில்.

ஐந்து அடி 10 அங்குலம் உயரம் கொண்ட கிருத்திகா, நடனம், யோகா, தடகளம் என ஆர்வம் கொண்டவர். டேவிட் பெக்காம் என்றால் கிருத்திகாவுக்கு உயிர்.

திகில் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவருக்கு, ரொம்ன்டிக் காமெடிப் படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.

திரில்லிங்கான வாழ்க்கையை விரும்பும் கிருத்திகா மிஸ் இந்தியா பட்டம் வெல்வது உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

செக்ஸ் குறித்த கிருத்திகாவின் கருத்து குறிப்பிடத்தக்கது – உலகின் சிறந்த உடற்பயிற்சிதான் செக்ஸ். உயிரினங்களின் அருமையான கலை வடிவம்தான் செக்ஸ் என்பது கிருத்திகாவின் எண்ணம்.

முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் மிஸ் இந்தியா பட்டம் வென்று தென் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார். இப்போது மதுரையைச் சேர்ந்த கிருத்திகா பாபு மிஸ் இந்தியா போட்டியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் - 2வது முறை அபராதம் விதிக்கப்பட்டதால் சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை: மெதுவாக பந்து வீசியதால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக சச்சினுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு போட்டியில் ஆட தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பவுலிங் செய்தது மும்பை அணி. அப்போது மெதுவாகப் பந்து வீசியதாக போட்டி நடுவர் புகார் கூறினார்.

இதையடுத்து சச்சினுக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சச்சினுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2 வதுமுறையாகும். ஐபிஎல் விதிமுறைப்படி 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால், அந்த வீரருக்கு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். எனவே சச்சினுக்கு அந்தப் பிரச்சினை வருமோ என்ற கவலையில் மும்பை அணியும், அதன் ரசிகர்களும் உள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை

நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில், ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், யாரும் ரஞ்சிதா மீது புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மனோகரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தபால் மூலம் புகார் அளித்தேன். ஆனால், கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிடுமாறு, கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நித்தியானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, ரஞ்சிதாவும் கைது செய்யப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் நக்கீரனில் வெளியானதில் இருந்து தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து கர்நாடக போலீசார் நித்தியானந்த ஆசிரமத்தில் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

நித்தியானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். நித்யானந்தா ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து, தேவைப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கர்நாடகா போலீஸ் முடிவு செய்துள்ளது

புனே, அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்க அடானி, வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்கள் மாயம்

புனே மற்றும் அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்காக அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் சமர்ப்பித்த ஏலத் தொகை அடங்கிய டாக்குமென்டுகள் காணவில்லை என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஏலத்தில் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் தோல்வி அடைந்தன. இந்தத் தோல்விதான், தரூர், மோடி இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஐபிஎல் முறைகேடுகள் குறித்த சர்ச்சை வெடித்ததும், மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமை அலுவலகத்திலும், மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்தறையினர் சோதனை நடத்தினர். பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் இதுவரை அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் ஏலம் கேட்டு தொகையுடன் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம் அகமதாபாத் அணியை வாங்க 5 பில்லியன் டாலர் ஏலத் தொகையுடன் விண்ணப்பித்திருந்தது. இந்தக் குழுமத்தின் தலைவர் கெளதம் அடானி ஆவார்.

இதேபோல, வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் நிறுவனம் புனே அணியை வாங்க 4 பில்லியன் டாலர் ஏலம் கேட்டிருந்தது.

இரு நிறுவனங்களும் ஏலத்தில் தோல்வி அடைந்தன. புனே அணியை சஹாரா குழுமம் வாங்கி விட்டது. அகமதாபாத் அணியை கேட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனம் பின்னர் கொச்சியைத் தேர்வு செய்தது. அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில்தான் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்களைக் காணவில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. அது கிடைத்தால் பல முக்கியத் தகவல்கள் விசாரணைக்குக் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

புனே, அகமதாபாத் அணிகளுக்கான ஏலத்தின் முதல் சுற்றில் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை, அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக இருந்த்தாக சர்ச்சை எழுந்தது. நிபந்தனைகளில் ஒன்று 100 மில்லியன் டாலர் வங்கி உத்தரவாதம் என்பதாகும்.

இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலையிட்டு இந்த நிபந்தனைகளை ரத்து செய்து விட்டு புதிதாக ஏலம் நடத்த உத்தரவிட்டார். அந்த 2வது கட்ட ஏலத்தின்போது அடானி, வீடியோகான் நிறுவனங்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இதனால் அதிக தொகைக்கு விண்ணப்பித்த ரெண்டஸ்வஸும், சஹாராவும் புனே, கொச்சி அணிகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது

டைட்டானிக் கப்பல் கடிதம்: 38 1/2 லட்சத்திற்கு ஏலம்

உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர்.

இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதம் லண்டனில் 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன் எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது.

கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

புதுப்பேட்டையில் மோட்டார் உதிரிபாக கடைகள் சிங்கபெருமாள் கோவிலுக்கு மாற்றம்

சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை சார்பாக பாசனம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை முதலமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்தார்.


அதில், ’’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரம் மொத்தம் 853 டி.எம்.சி. அண்டை மாநிலங்களில் இருந்து 261 டி.எம்.சி. தண்ணீர் வருகிறது. தமிழ்நாட்டில 78 பெரிய அணைகளும், 7 சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 233.20 டி.எம்.சி.

மாநிலத்தின் மொத்த பாசன பரப்பளவு சுமார் 33.93 லட்சம் ஹெக்டேர். வேளாண்மை துறை மூலம் நெல் மற்றும் உணவு பயிர் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கூவம் ஆற்றை சீரமைக்க, சென்னை நதிநீர் சீரமைப்பு அறக் கட்டளைக்கும், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும் இடையே கடந்த மார்ச் 18-ந்தேதி முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் முதல் கட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரிபாகங்களின் சிறு தொழிற்சாலைகளை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆம்பூருக்கு மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கூவம் ஆறு மற்றும் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி 2 மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்துள்ளோருக்கு மாற்று இட வசதி வழங்கப்படும்.

இதன் முதல் கட்டமாக புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் இருந்த சுமார் 1150 ஆக்கிரமிப்புகள் கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்று இடம் தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்க அழகிய பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை ஏற்படுத்துவதற்கு 30.4.2010 வரை கால அவகாசம் அளித்து கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் நலன் கருதி அரசு தொடர்ந்து தன் வாதங்களை அரசியல் சாசன சட்ட அமர்வு முன்பு வைக்கும். இதுபோல பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு, நெய்யாறு-இடகரை பாசன திட்டம், பம்பா அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்ற தமிழக அரசு கேரள அரசுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கணேசபுரம் என்ற இடத்தில் நீர்தேக்கம் கட்டப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

2009-2010 நிதியாண்டில் மார்ச் வரை தமிழ்நாட்டில் 130 மணல் குவாரிகள் மூலம் 142.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.840.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு புதிய சட்டமன்ற வளாகம் 425.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் மேற்கூரையாக 100 அடி உயர கோபுரம் (டூம்) அமைக்கப்படுகிறது. தேர் வடிவமைப்பு கொண்ட இதன் எடை 800 டன். 12 மீட்டர் விட்டம் கொண்ட இதில் அமைக்கப்படும் சிறப்பு கண்ணாடி மூலம் சட்டசபை கூடத்துக்குள் இயற்கை ஒளி பரவும். இதன்மூலம் மின் ஆற்றலின் செயல்பாடு 20 சதவீதம் குறையும்.

இந்த கட்டிடத்துக்கு தங்க தர சான்று கிடைத் துள்ளது. தலைமை செயலக துறைகளுக்கான 7 கட்டிடங் கள் ரூ.279.56 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் ரூ.171.78 கோடி செலவில் நவீன முறையில் கட்டப்படுகிறது.

இதை ஒரே நேரத்தில் 1250 பேர் பயன்படுத்தலாம். 1280 பேர் அமரக்கூடிய அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. சென்னையில் பல் மருத்துவ மனைக்கு ரூ.13.66 கோடியில் புதிய கூடுதல் கட்டிடம், சென்னை எழும்பூர் மகப்பேறு குழந்தைகள் மருத்துவ மனையில் ரூ.56.32 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் ரூ.16.65 கோடி செலவில் குழந்தை நல சிறப்பு கட்டிடம்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.41.20 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை நந்தனம் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70.20 கோடி செலவில் புதிய கட்டிடம் இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.1324.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.797.14 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’’கூறப்பட்டுள்ளது.

மேகாலயா முதல்வர் ராஜினாமா

மேகாலயா மாநிலத்தில் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர முன்வந்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் தலைவர் லபாங் முதல்வர் ஆனார். ஆனால் லபாங் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 28 பேர் காங்கிரசில் உள்ளனர்.

இவர்களில் 20 பேர் லபாங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தற்போது துணை முதல்வராக இருக்கும் முகுல் சங்மாவை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினையை அடுத்து முதல்வர் லபாங் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். புதிய முதல்-மந்திரி தேர்வு இன்று நடக்கிறது.
முகுல் சங்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வரும் 2010-11 கல்வியாண்டில் இடமாறுதல் பெற விரும்பினால் விண்ணப்பங்களை இப்போது அளிக்க வேண்டும்.

இடமாறுதல் கேட்டு ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இம்மாதம் 29ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர்கள், சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் இவற்றை சரிபார்த்து வரும் 30ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

மேலும், வெளிமாவட்ட இடமாறுதல் கோரும் விண்ணப்பத்தினையும், ஒரு ஆசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும் அவற்றையும் அனுப்பலாம். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை தொகுத்து மே 4ஆம் தேதிக்குள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என்று பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 1,500 குடியிருப்புகள்

அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

புதிய சட்டசபை கட்ட ஏதுவாக கலைவாணர் அரங்கத்தை அகற்ற வேண்டியதாயிற்று. கலைவாணர் அரங்கம் பல்வேறு வகையில் பயன்பட்டது. மீண்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கலைவாணர் அரங்கம் நவீன கூட்டரங்கமாக கட்டப்படும். அதில் சுமார் 1,500 பேர் அமரலாம்.

இந்த புதிய கலைவாணர் அரங்கம் ரூ. 50 கோடி செலவில் கட்டப்படும்.

தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கொரடாச்சேரி பேரூ. இடைத்தேர்தல் : திமுக, அதிமுகவினர் தீவிர பிரசாரம்

கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தலில் திமுக , அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதை ஒட்டி நேற்று (17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில் திமுக, அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரித்தனர்.

ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வட்டத்தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் வீடு வீடாக சென்ற ஓட்டு சேகரித்தனர். இதேபோல் அமைச்சர் மதிவாணன், எம்.பி. விஜயன் ஆகியோரும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
இதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் முன்னாள் எம்.பி. செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராமகுணசேகரன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் வீரசேனன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் மற்றும் கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். பிரசாரம் நிறைவடைந்த நிலையில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 21ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகுமார், உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜன்பாபு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., பிரவின் குமார் அபினபு தலைமையில் திருவாரூர் டி.எஸ்.பி. சீனிவாசன், கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

ரோட்டோரம் பஸ் கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு லிங்கன் என்ற தனியார் பஸ் சென்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் லிங்கத்தடி அருகே வந்தது. ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. எதிரே வந்த பைக்குக்கு வழிவிடுவதற்காக பஸ்ஸை ஒதுங்கியபோது, ரோட்டோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழவாடியக்காடு சேகர், கர்ப்பநாதர்குளம் அய்யாசாமி, பாலசுந்தரம், ஆயக்காரன்புலம் ராஜலட்சுமி, கடஞ்சவிளாகம் சுந்தராம்பாள், வண்டுவாஞ்சேரி ராஜேந்திரன் ஆகிய ஆறு பேர் பலத்த காயத்துடன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 36 பேர் லேசான காயத்துடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முத்துப்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., அருள்பிரியா விசாரித்து, தலைமறைவான பஸ் டிரைவர் காதர் மைதீன், கண்டெக்டர் ஜெய்குமார் ஆகியோரை தேடிவருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களை நாகை எம்.பி., விஜயன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., உலகநாதன், பாரதிய ஜனதா மாநில இளைஞரணி தலைவர் முருகானந்தம், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கராசு உட்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.