கேப்டன் டிவி துவக்கம்...

தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சியான கேப்டன் டிவியை இன்று காலை துவக்கி வைத்தார் அதன் நிறுவனரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

கேப்டன் டிவிக்கு தனது வாழ்த்துக்களை போன் மூலம் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

பொழுது போக்கு மற்றும் கட்சிப் பிரச்சாரம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கேப்டன் டிவி சேனல் துவங்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் இந்த சேனலில் தினமும் 4 முறை செய்திகள் ஒளிபரப்பாக உள்ளது.

விஜயகாந்த் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் பிரதானமாக இடம்பெறும்.

சித்திரை முதல் நாளான இன்று முறைப்படி கேப்டன் டி.வி. துவங்கப்பட்டது. இன்று காலை 5.59 மணிக்கு வானகரத்தில் உள்ள கேப்டன் டி.வி. அலுவலகத்தை விஜயகாந்த் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார். அவரைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் குத்துவிளக்கு ஏற்றினார்.

சரியாக 6 மணிக்கு ரிமோட் பட்டனை இயக்கி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். முதலில் கேப்டன் டி.வி. லோகோவும் அதைத் தொடர்ந்து பக்திப் பாடல்களும் ஒளிபரப்பாகின.

அதற்கடுத்த நிகழ்ச்சியாக 'கேப்டனின் லட்சிய பயணம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கேப்டன் டி.வி. தொடங்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் டெலிபோனில் விஜயகாந்திடம் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர்கள் விஜய், விவேக் ஓப்ராய், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஜே.எம்.ஆரூண் எம்.பி., நடிகர்கள் முரளி, மன்சூர்அலிகான், ராமேஷ்கன்னா, பொன்னம்பலம், படத் தயாரிப்பாளர்கள் சிவா, மைக்கேல் ராயப்பன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்

விற்பனைக்கு வரும் கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவுக்குச் சொந்தமான கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணி விற்பனைக்கு வருகிறது.

இந்த அணியை விற்றுவிட ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் அவர்களுடன் சேர்ந்து இதை நடத்தி வரும் மோகித் பர்மன் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

இதை வாங்க ஒரு நிறுவனம் இந்த மூவருடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது.

இந்த அணியின் விலை ரூ. 1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஐபிஎல் சீசன்-3 போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சீசன்-3 போட்டிகள் முடிந்த பின்னரே அணியி்ன் விற்பனை இருக்கும். எதற்காக இந்த அணியை மூவரும் விற்க முடிவு செய்தனர் என்று தெரியவில்லை.

சீசன் 3 போட்டிகளில் இந்த அணி படுமோசமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மொத்தம் விளையாடிய 12 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்த அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆனாலும் இறுதிக் கட்டத்தில் இந்த அணி நன்றாக விளையாட ஆரம்பித்துள்ளது

இங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்

பார்வையற்றோரும்செக்ஸ் புத்தகத்தைப் படித்து ரசிக்க வாய்ப்பு வந்து விட்டது.

அவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேக்டைல் மைன்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட புத்தகம் லண்டனில் வெளியாகிறது. லிசா மர்பி என்ற கனடா நாட்டு புகைப்படக்காரர் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார். இதன் விலை 150 பவுண்டுகளாகும்.

பிரெய்லி எழுத்துக்களால் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மேலும், ஆண் மற்றும் பெண்களின் நிர்வாணப் படங்களை கையால் தடவி உணரும் வகையில் இடம் பெற்றுள்ளன இந்தப் புத்தகத்தில்.

இதுகுறித்து டெய்லி டெலிகிராப் நாளிதழுக்கு மர்பி அளித்துள்ள பேட்டியில், இது புதிய முயற்சி. சாதனை முயற்சியும் கூட. ஏற்கனவே பிளேபாய் பத்திரிக்கை பார்வையற்றோருக்காக பிரெய்லி வார்த்தைகளால் அடங்கிய புத்தகத்தை வைத்துள்ளது.

ஆனால் அதில் படங்கள் கிடைய்து. எங்களது புத்தகத்தில் படங்களும் உண்டு என்றார் அவர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - ஊட்டி இளைஞர் தற்கொலை

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை மையாக கொண்டு ஊட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை செய்து இறந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் மகேஷ் (32). இவர், ஜாலி டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், நேற்று காலை தனது அறையில் மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊட்டியில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தின் காரணமாக, மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறினர்.

மேலும், கிரிக்கெட் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மகேஷின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

பின்பு போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் குறி்த்து ஊட்டி போலீசார் கூறுகையில்,

'மகேஷ் மெயின் பஜாரில் உள்ள நேமிசந்த், பிரகாஷ் ஆகியோரிடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பிரகாஷ் மிரட்டியதால் செய்வதறியாது மகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

ஆனால், மகேஷ் தன் காதலியிடம் 13 சவரன் நகை பெற்று அடகு வைத்தது தெரிய வந்துள்ளது. பணத்தை வரும் 15ம் தேதி திருப்பி கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று இரவு இருவரும் மொபைல் போனில் பேசியுள்ளனர். காலையில் மகேஷை தொடர்பு கொள்ள முயற்சித்தார். நீண்ட நேரமாக மகேஷ் பேசாததால், டிராவல்சுக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்க கூறியுள்ளார்.

டிராவல்சிலிருந்து சிலர் மகேசின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது' என்றனர்.

ஹைதியில் பள்ளிக்கூடம் கட்டும் ஷகீரா

பூகம்பத்தால் உருக்குலைந்து போயுள்ள ஹைதியில் பள்ளிக்கூடம் கட்ட முடிவ செய்துள்ளார் கொலம்பியாவைச் சேர்ந்த பாப் பாடகி ஷகீரா.

கரீபியத் தீவான ஹைதியில், ஜனவரி 12ம் தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஹைதி தீவே உருக்குலைந்து போயுள்ளது.

இதையடுத்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் பிரபலங்கள் ஹைதி தீவுக்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொலம்பியாவைச் சேர்ந்த பாப் பாடகி ஷகீராவும் ஹைதி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

ஹைதிக்கு தனி விமானத்தில் வந்த ஷகீரா, தலைநகர் போர்ட் ஆ பிரின்ஸில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு விசிட் அடித்தார். அங்கு நூற்றுக்கணக்கான சிறார்களை சந்தித்துப் பேசினார். அவர்களுக்காக நடனம் ஆடி பாடல் பாடி மகிழ்வித்தார். பின்னர் அருகில் 50 ஆயிரம் பேர் தங்கியுள்ள ஒரு முகாமுக்குச் சென்று அங்கிருப்போரை சந்தித்த ஆறுதல் கூறினார்.

அங்கு அமெரிக்க நடிகர் சீன் பென்னும் வந்திருந்தார்.

பின்னர் ஷகீரா கூறுகையில், பேர்பூட் பள்ளியை மறு சீரமைத்துக் கட்டிக் கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். எனது அறக்கட்டளை மூலம் இதைச் செய்து தரப் போகிறேன் என்றார்.

ஷகீரா நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே கொலம்பியாவில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு 6000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகினியில் கலக்கும் லேகா

தென்னிந்தியப் பெண்கள் பாலிவுட் பிரவேசம் செய்வது, வைஜெயந்திமாலா தொடங்கி த்ரிஷா - விமலா ராமன் வரை அன்று முதல் இன்று வரை தொடர் கதையாக உள்ளது.
இவர்கள் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் லேகா வாஷிங்டன். கொஞ்சம் இத்தாலி, கொஞ்சம் மராட்டியம், கொஞ்சம் பர்மீஸ் என கலவையான தோற்றம் கொண்ட சென்னைப் பெண் லேகா.

திரைப்பட இயக்கம் குறித்து அகமதாபாத் நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற இவர், பின்னர் எஸ்எஸ் மியூசிக்கில் அறிவிப்பாளராக வலம் வந்தார். சிம்புவுடன் கெட்டவன் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்து, போட்டோ ஷூட் எல்லாம் கூட எடுத்தார்கள்.

ஆனால் சிம்பு நிராகரித்துவிட்டார் லேகாவை. காரணம் கேட்டதற்கு, 'அந்தப் பெண்ணுக்கு நடிப்பு வரவில்லை' என்றார் ஓப்பனாக. பெரும் அதிர்ச்சியிலிருந்த லேகாவுக்கு ஆர் கண்ணன் மூலம் ஜெயம்கொண்டான் பட வாய்ப்பு வந்தது.

ஐபிஎல் மாட்சுகளில் அறிவிப்பாளராக ஒப்பந்தம் ஆனதும் அவரது எல்லை தமிழ் சினிமாவைத் தாண்டியது.

இப்போது பாலிவுட்டில் ஒரு முக்கியமான படத்தில் நாயகி லேகா வாஷிங்டன்.

கவர்ச்சியின் விளிம்பு எது என்று கேட்க வைக்கும் படு செக்ஸியான வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். படத்தில் பெரும்பாலும் அவரது காஸ்ட்யூம் பிகினிதானாம். அவருடன் சேர்ந்து விளையாடியிருப்பவர் ராஜீவ் கண்டேல்வால்.

படத்துக்குப் பெயர் பீட்டர் கயா காம் ஸே!--

சானியாவுக்கு சோயப்பின் 'மெஹர்' ரூ. 61 லட்சம்

சானியாவுக்கு சோயப் மாலிக், மெஹர் தொகையாக ரூ. 61 லட்சம் அளித்துள்ளார்.

கடந்த2002ம் ஆண்டு சோயப்புக்கும், ஆயிஷாவுக்கும் இடையிலான திருமணம் பதிவானது. அந்த நிக்கநாமாவில் சோயப் மாலிக் கையெழுத்திட்டுள்ளார். அதில், ஆயிஷாவுக்கு ரூ. 500 பாகிஸ்தான் பணத்தை மெஹராக தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நேற்று சானியாவுடன் நடந்த திருமணத்தின்போது ரூ. 61 லட்சம் மெஹராக கொடுத்துள்ளார் சோயப்.

அதுதவிர ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்துள்ளாராம்.

திருமண நடவடிக்கைகளை முடித்து வைத்த காஜி நிஜாமுதீன் ஹுசேன் இதுகுறித்துக் கூறுகையில், ரூ. 61 லட்சம் மெஹரா தர முடிவானது என்றார்.

மெஹர் என்பது முஸ்லீம் சமுதாயத்தில், மணமகளுக்கு மணமகன் தர வேண்டியதாகும். அதை பணமாகவோ, தங்கமாகவோ அல்லது பிற விலை உயர்ந்த பொருட்களாகவோ கொடுப்பார்கள். அவரவர் வசதிப்படி இது அமையும்.

இந்த மெஹருக்கு முக்கிய காரணமே, எதிர்காலத்தில் மணமகனுக்கு மரணமோ அல்லது விவாகரத்தோ நடந்தால், அவரை மணக்கும் பெண்ணின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு இது உதவும் என்பது தான்.

ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண் டும். ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி, 60 வயதான ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சுற்றுலாத் துறை மூலம் கட்டண மீட்டர் வழங்கி கட்டணத்தை முறைபடுத்த வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் லைசென்ஸ், பேட்ச் வழங்க வேண்டும்.


ஆட் டோ ஸ்டேண்டுகளுக்கு நகராட்சி சார்பில் மேற் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, நேற்று புதுச்சேரி அனைத்து ஆட்டோ சங்கங் களின் கூட்டு போராட்டக் குழுவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் அண்ணா சாலையில் இருந்து பேரணியாக புறப் பட்டு சட்டசபை நோக்கி வந்தனர். சட்டசபை அருகில் அவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு, பின் முதல்வர் வைத்திலிங் கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கரென்ட்' இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம்: கார் பேட்டரியை பயன்படுத்தலாம்

எலக்ட்ரிக் கார்கள், போக்குவரத்துக்கு மட்டுமின்றி, மின் தொகுப்புக்குத் தேவையான மின்சாரத்தையும் கொடுக்க வல்லவை என்பதை, அமெரிக்க வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவில், டெலவேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லெட் கெம்ப்டன் என்பவர், இந்த முறையை செயல்படுத்த வெகிக்கிள் டூ கிரிட் என்ற தொழில்நுட்பத்தை, 1997ல் கண்டுபிடித்தார்.



வருங்காலத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சக்திதான் உலகின் மாற்று மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக இருக்கும். அப்போது இவ்வகைக் கார்கள் பெருமளவில் உதவும்' என்கிறார் கெம்ப்டன்.இவர், எலக்ட்ரிக் கார் பேட்டரியிலிருந்து, 10 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என கூறுகிறார். தற்போது, டொயோட்டா சியான் மாடல் கார்களை இது போன்று மாற்றியுள்ளார்.



டெலவேர் பல்கலையில் மூன்று கார்களும், டெலவேர் மாநில அரசுத் துறையில், நான்கு கார்களும் இந்த முறையில் இயங்குகின்றன.காரின் முன்பகுதி வழியே, மின்தொகுப்பில் இணைப்பு தரப்படும். இதன் மூலம் மின்சாரத்தைப் பெறவோ, வழங்கவோ இயலும். நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற, 'சார்ஜர்' நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



நம் பயன்பாட்டைத் தவிர்த்து, மிச்சமுள்ள மின்சாரத்தை, அந்த மின்தொகுப்பில் கொடுத்து விட்டு, அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மின்மாற்று, இணையம் மூலம் கட்டுப்படுத்தப்படும்.தற்போது இந்த, 'வி2ஜி' தொழில்நுட்பம் பொருத்தப் பட்ட ஒரு காரின் விலை 36 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால், 'இவ்வகைக் கார்கள் அதிகளவில் உற்பத்தியானால் ஒரு காரின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை குறையும்' என்கிறார் கெம்ப்டன்.

ராமேஸ்வரத்தில் மீன்பிடி தடை இன்று முதல் அமல்

தமிழக அரசின் மீன்பிடி தடையை முன்னிட்டு ,ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(ஏப்.14) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழக கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஏப்.15 முதல் மே 31 வரை ஒன்றரை மாத காலம் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்து ,


ஆண்டு தோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகுகள் ,கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்படும் நிலையில், ராமேஸ்வரத்தில் மட்டும் இன்று முதல் இத்தடை அமல்படுத்தப்படுகிறது. இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் பிரச்னை நடந்தபோதும், வழக்கம் போல் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ,நேற்று அதிகாலையில் கரை திரும்பினர்.


தடைக்கு முன் இறுதிக்கடல் நாள் என்பதால், மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் அனைவரும், நேற்று காலையில் கரை திரும்பியதும், படகிலிருந்து பிடித்து வந்த மீன்களை அள்ளியதும்,மீன்பிடி சாதனங்களை இறக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர். படகிலிருந்து இறக்கிய வலை,கயிறு, போட்பலகை போன்றவற்றை டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் ஏற்றிய மீனவர்கள் ,தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.


ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இன்று முதல் மீன்பிடிதடை அமலுக்கு வந்ததால், மீன்துறை அலுவலகத்தில் படகுகளுக்கான டீசல்டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஏராளமான படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூரை சேர்ந்த மீனவ கூலிகள் நேற்று மாலையே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


மீன்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி கூறுகையில்,'' தமிழகம் முழுவதும் ஏப்.15 ல் மீன்பிடி தடை அமலுக்கு வந்தாலும், ராமேஸ்வரத்தில் ஏப்.14 முதலே மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை ,'' என்றார்.

வேதாரண்யத்தில் விரைவில் அரசு கல்லூரி

வேதாரண்யத்தில் விரைவில் கல்லூரி அமைக்க ஆவன செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தெரிவித்தார்.


வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளப்பள்ளம், கள்ளிமேடு, நாலுவேதபதி ஆகிய ஊராட்சிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து இந்த ஊராட்சிகளில் நடந்த விழாவிற்கு கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., வேதரத்தினம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் யூசுப், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தொடக்கி வைத்து அமைச்சர்

மதிவாணன் பேசியதாவது:


நாலுவேதபதி ஊராட்சியில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள சித்த மருத்துவமனை சீரமைத்து செயல்படுத்தப்படும். 234 தொகுதிகளிலும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் வேதாரண்யம் தொகுதிக்கு 4 பள்ளிகளை எம்.எல்.ஏ., வேதரத்தினம் தனது முயற்சியால் பெற்றுள்ளார். மேலும் வேதாரண்யத்தில் அரசு கல்லூரி அமைக்க அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு நானும் உறுதுணையாக இருந்து அவருடன் சேர்ந்து தமிழக முதல்வர், துணை முதல்வர், கல்வித்துறை அமைச்சருடன் பேசி அடுத்த நிதியாண்டிற்குள் வேதாரண்யத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ., வேதரத்தினம் பேசுகையில், வேதாரண்யம் தொகுதி தன்னிறைவு பெற்று வருகிறது. வேதாரண்யத்தில் அரசு கல்லூரி தொடங்குவது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.


விரைவில் வேதாரண்யம் தொகுதியில் நிச்சயம் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்றார். விழாவில் பயனாளிகளுக்கு அரசின் கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டைகளையும், கார்த்திகை கிழங்கு, மூலிகை பயிர் சாகுபடியாளர்களுக்கு மான்யத் தொகைகளையும் அமைச்சர் வழங்கினார். தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் அமிர்தலிங்கம், தாசில்தார் கருணாகரன், ஒன்றிய ஆணையர்கள் மகேந்திரன், குணசேகரன், ஊராட்சித் தலைவர்கள் காமராசு, ஜெயா சுப்பிரமணியன், சண்முகராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி








ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின்.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூஸ் 48 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். பின்னர் களம் இறங்கிய சென்னை அணி 13.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.


இதையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா, முரளி விஜய் ஆகியோர் அபாரமாக விளையாடினர். ரெய்னா 39 பந்துகளில் 78 எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். முரளி விஜய் 40 பந்துகளில் 50 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும்.


பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இளைஞர் : தற்கொலை இடமாக மாறும் அவலம்

பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியிலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாம்பன் ரோடு பாலத்தின் மேல் நேற்று பிற்பகல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா வாகனங்களும் பாலத்தின் மேல் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை 3 மணியளவில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள, ரயில் பாலத்தின் கப்பல் செல்லும் போது திறக்கும் பகுதியை, சுற்றுலா பயணிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பாம்பன் ரோடு பாலத்தின் கைப்பிடி தடுப்பு சுவர் மீது 20 வயதுள்ள இளைஞர் ஒருவர் ஏறி நின்று, திடீரென்று கடலில் குதித்து விட்டார். சுற்றுலா பயணிகள் கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர்.


கடலில் குதித்த இளைஞர் சில நிமிடங்களில் இரண்டு முறை மட்டும் கடல் நீருக்கு மேலே தலையை தூக்கி கைகளை வெளியே நீட்டியபின் கடலுக்குள் மூழ்கிவிட்டார். இளைஞர் குதித்த இடம் கப்பல் செல்லும் நடுப்பாலம் என்பதாலும், கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும் இளைஞரின் உடல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. பாம்பன் கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் சிலர் படகில் விரைந்து சென்று கடலில் குதித்தவரை தேடியும், அவரது உடல் அகப்படவில்லை. கடலோர காவல் படை போலீசாரும் இப்பகுதிக்கு வந்து தேடிப்பார்த்தும் உடல் கிடைக்கவில்லை.


'கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், கடலில் மூழ்கியவரின் உடல் வேறு எங்காவது கரையில் ஒதுங்குவதற்கு வாய்ப்புள்ளது' என்று, மீனவர்கள் தெரிவித்தனர்.
இதே பாலத்தில் இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ள போதும் கடலில் குதித்தவர்கள் நடுப்பாலத்தில் குதிக்காததால் அவர்களை எல்லாம் மீனவர்கள் சிறு காயங்களுடன் காப்பாற்றியுள்ளனர். ஆனால் நேற்று குதித்தவர் நீரோட்டம் மிகுந்த கடல் பகுதியில் குதித்ததால் நீரோட்டத்தில் சிக்கி கடலில் மூழ்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். பாம்பன் கடலில் கடலையும், தீவுகளையும் பார்த்து ரசிக்க சுற்றுலா பயனிகளுக்கு பயன்படும் பாம்பன் ரோடு பாலம் தற்போது கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள தகுந்த இடமாகவும் மாறிவருகிறது. இந்நிலையை மாற்ற இங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.

கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தஞ்சையில் ஏப்., 14ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்ரல் 14 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் ஏழு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் வயது வரம்பின்றி அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.


16 வயதுக்கு உட்பட்ட மாண வ, மாணவிகளுக்கு 400 ரூபாயும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாயும் கட்டணமாக செலுத்தி நீச்சல் கற்றுக் கொள்ளலாம். காலை ஆறு முதல் நீச்சல் பயிற்சி வகுப்பு நடக்கும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை

பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்று கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவிசாதனை படைத்துள்ளார்.தமிழ்நாட்டில் பி.எட். கல்லூரிகளை ஒருங்கிணைப்பதற்காக 2008-09ல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் தோற்றுவிக் கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் தேர்வு 2009 மே மாதம் நடந்தது.


இத் தேர்வில் கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., பயின்ற மாணவி ரேணுகாதேவி தஞ்சை மண்டலத்தில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஏப்.7ம்தேதி நடந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பல்கலைக்கழகம் சிறப்புப் பரிசு வழங்கியது. மாணவியை கல்லூரி தாளாளர் விஜயகுமார், முதல்வர் ராஜசேகரன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.