சுவிட்சர்லாந்தில் மாபெரும் பேரணி

காஸா மீதான இஸ்ரேலின் அத்துமீறல் யுத்தத்தின் ஒருவருடப் பூர்த்தியை

ஸ்விட்சர்லாந்தில் மாபெரும் பேரணி

நினைவுகூறுமுகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.12.2009) நூற்றுக்கணக்கான பலஸ்தீன் ஆதரவாளர்கள் ஸ்விட்சர்லாந்திலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன் ஒன்றுகூடினர்.

இஸ்ரேலிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக 1400 பலூன்கள் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஸ்விட்சர்லாந்தின் கிரீன் கட்சி, சமுதாயக் கட்சி, தொழிலாளர் கட்சி, பிற அமைப்புக்கள், மனித உரிமைகள் குழுக்கள் உள்ளிட்ட நாற்பது அமைப்புக்கள் கலந்துகொண்டன.

இதேவேளை, ஸ்விஸிலிருந்து காஸாவைச் சென்றடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தம் குறித்து அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர்.

மேற்படி நிகழ்வின்போது அனைத்து அமைப்புக்கள் சார்பாகவும் ஸ்விட்சர்லாந்தின் வலதுசாரிகள்; வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காஸாமீது நடைமுறைப்படுத்தியுள்ள முற்றுகை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும், இஸ்ரேலியப் போர்க் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ஜனவரி 7 ஆம் திகதி இஸ்ரேலியப் படையினரால் காஸாவின் ஐ.நா. UNRWA

காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட ஐ.நா. பாடசாலை

பாடசாலையில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவுதினமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதோடு, இஸ்ரேலியப் பொருட்களையும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபைக்கு ஆதரவு வழங்கும் அனைத்துக் கம்பனிகளின் தயாரிப்புக்களையும் பகிஷ்கரிப்புச் செய்யும் போராட்டத்துக்குப் புத்துயிர்ப்பளிப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஸாவின் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்களோடு தொடர்புடைய இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமொன் பெரஸுக்கு வழங்கப்பட்டுள்ள சமாதானத்துக்கான நோபல் பரிசு இரத்துச் செய்யப்படவேண்டும் என்றும் மேற்படி அமைப்பு கோரியுள்ளது.

நன்றி: PIC

சென்னை ஓபன் இன்று தொடக்கம்

பலத்த எதிர்பார்பிற்கிடையே 15வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.உலகின் முன்னணி வீரர்கள் மோதும் இப்போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் அரங்கில் இன்று (ஜன.4-10) தொடங்குகிறது. ஆண்டின் முதல் சர்வதேச போட்டி என்பதால் நட்சத்திர வீரர்கள் சென்னை வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரபேல் நடால், போரிஸ் பெக்கர், ராப்தர், கார்லஸ் மோயா, கபெல் நிகோவ், மார்க் உட்பிரிட்ஜ், டாட் உட்பிரிட்ஜ், உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சென்னை போட்டியில் பங்கேற்றுள்ளனர். தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலக தரவரிசையில் 100 இடத்திற்குள் உள்ள 16 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
நடப்பு சாம்பியன் மரின் சிலிக், 2வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 2 முறை பட்டம் வென்றுள்ள கார்லஸ் மோயா, முதல் நிலை அந்துஸ்து பெற்றுள்ள ராபின் சோடர்லிங், வாவ்ரின்கா, ரெய்னர் ஷட்லர், ராஜீவ் ராம் உட்பட 32 வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
இந்தியாவின் டாப் 2 வீரர்களான லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி பங்கேற்காதது ஏமாற்றமளித்தாலும், இளம் வீரர்கள் சோம்தேவ், போபன்னா களம் இறங்குவதால் உள்ளூர் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்திய வீரர்களுக்கு சவால்: இந்தியாவின் நம்பர் 1 வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் (126வது ரேங்க்) தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் ரெய்னர் ஷட்டரை (85வது ரேங்க்) எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு சென்னை ஓபன் அரைஇறுதியில் இந்த இரு வீரர்களும் மோத இருந்தனர்.
காயம் காரணமாக ஷெல்டர் விலக இறுதிப் போட்டிக்கு சோம்தேவ் முன்னேறினார். கடந்த 2 ஆண்டுகளாக சோம்தேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் பெருமையோடு கூறுகிறார்.
எனினும் தொடக்க சுற்றில் அனுபவ வீரரும், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு பெற்ற வீரரும் மோதுவதால் சென்னை ஓபன் தொடக்கமே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபன்னா ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரின்காவை (21வது ரேங்க்) சந்திக்கிறார்.
இந்த போட்டியில் ரோகன் அதிசயம் நிகழ்த்தினாலே 2வது சுற்றுக்கு முன்னேற முடியும்.

காங்கோவில் வெடித்துச் சிதறும் எரிமலை

காங்கோவில் வெடித்துச் சிதறும் எரிமலைகோமா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள நியாமுல கிரா எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
இதனால் இப்பகுதியில் பகுதியில் அதிகளவில் காணப்படும் அபூர்வ இனமான சிம்பன்சி குரங்குகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.சிம்பன்சி தவிர 40 வகை விலங்குகளும் அழியும் ஆபத்து உருவாகியுள்ளது.
அழிவில் இருந்து அந்த விலங்குகளை காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

சத்தியபாதையை ஏற்றார் ஏபல் சேவியர்!

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர்.

மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார்.

இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

2013ல் இந்திய ராக்கெட் நிலாவில் காலடி பதிக்கும்

திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஏ’’ற்கனவே அனுப்பப்பட்ட இந்திய ராக்கெட் சந்திராயன்-1 நிலாவில் தண்ணீர் இருப்பது பற்றியும் ரசாயன பொருட்கள் இருப்பது பற்றியும் ஆய்வு நடத்தியது.

இதை தொடர்ந்து நிலாவுக்கு ராக்கெட் ஒன்று அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக சந்திராயன்-2 ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா-ரஷிய கூட்டமைப்பில் தயாரிக்கப்படுகிறது.

திட்டமிட்டப்படி 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சந்திராயன்-2 நிலாவுக்கு அனுப்பப்படும் வெற்றிகரமாக நிலாவில் காலடி பதிக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்’’என்று தெரிவித்தார்.

மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்ததால் போராட்டம் வாபஸ்

திருச்சியில் கடந்த 16, 17, 18-ந்தேதிகளில் சங்கராச்சாரியாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம், நாங்கள் உயிரினும் மேலாக கருதப்படும் நபிகள் நாயகம் பற்றி பேசும்போது, சங்கராச்சாரியார், நபிகள் நாயகத்தின் அவதாரமாக திகழ்கிறார் என்று பேசி இருக்கிறார்.

அல்லா என்ற வார்த்தை. புனிதமான வார்த்தை இதையும் அவர் பிரதிபலித்துள்ளார். இப்படி அவர் பேசியதால் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 1-ந்தேதி ஆதீனம் மடம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு போலீசில் அனுமதி கேட்டோம். அன்று விழாக்காலம் என்று கூறியதால் மறுநாள் (2-ந்தேதி) காலை முற்றுகை போராட்டம் நடத்த இருந்தோம்.

இதை அறிந்த ஆதீனம் சென்னையில் உள்ள எங்களது தலைமைய கத்துடன் தொடர்பு கொண்டு நான் நபிகள் நாயகம் பற்றி ஏதும் குறை வாக பேசவில்லை என்று கூறி இருக்கிறார்.

ஆனால் எங்களிடம் சி.டி. ஆதாரம் இருந்ததால் நேற்று போலீஸ் அதிகாரியுடன் ஆதீனம் மடத்திற்கு சென்று அவரிடம் எடுத்து கூறி னோம். முதலில் மறுத்த அவர் பின்னர் வருத்தம் தெரிவிப்பதாக அவர் கைப்பட எழுதி தந்தார். இதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இனிமேல் தமிழகத்தில் கொள்கை ரீதியாக எந்த மதத்தவரும் நபிகள் நாயகம் பற்றி விமர்சித்து பேசினால் கடுமையான போராட்டம் நடத்துவோம்’’என்று கூறினார்.

கடலில் எண்ணைக் கசிவு - குவியல், குவியலாக செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடலோர பகுதியில், கடலலைகள் கறுப்பு நிற எண்ணை கழிவுகளுடன் காணப்படுவதாலும், குவியல், குவியலாக மீன்கள் செத்துக்கிடப்பதாலும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
சென்னை, பாலவாக்கத்தை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கறுப்பு நிறத்தில் எண்ணை கழிவுகள் கரையோரம் காணப்படுகிறது. கடலுக்குள்ளும் பல கிலோ மீட்டர் தூரம் வரை இந்த எண்ணை கழிவுகள் பரவியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே மீன்களும் செத்து மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.
பல்வேறு இடங்களில் கரையோரத்திலும் மீன்கள் செத்துமிதக்கின்றன.இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், '2 நாட்களாக கடல் அலைகளுடன் இதுபோல் எண்ணை கழிவுகள் வருகிறது. கெட்டுப்போன எண்ணை கழிவுகள் கப்பல்களில் இருந்து கொட்டப்பட்டு இருந்தால் இதுபோன்ற அலைகள் ஏற்படும்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டோம்.புத்தாண்டு விடுமுறை நாட்கள் என்பதால் என்னவோ எந்த அதிகாரியும் இதுவரை வந்து பார்க்கவில்லை. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் இந்த எண்ணை படிவங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார்.

இஸ்ரேலிய படையின் படுகொலைகள் .

2009 ஆம் ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களை

காஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகளுக்கான பலஸ்தீன் மையம் குறிப்பிடுகையில், கடந்த வாரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகளின்போது ஆறு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒரு பெண்மணி, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை மேற்படி பலஸ்தீன் மையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடந்த ஒருவார காலத்துக்குள் மட்டும் மேற்குக் கரையில் 28, காஸாவில் 2 என அடுத்தடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, 26 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடிவைத்துள்ளதோடு, ஒருசிலவற்றைத் திறந்தாலும் கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும் பலஸ்தீன் மீனவர்களை விரட்டிவிடுவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

வேலை வேண்டுமா? ட்விட்டரில் தேடலாம்

வேலை தேட இனி ட்விட்டர், ஆர்க்குட் போன்ற சமூக இணைப்பு இணைய தளங்களின் உதவியை நாடலாம்.
அதுபோன்ற இணைய தளங்களில் உறுப்பினராக இருப்பவரை தேர்வு செய்ய கம்பெனிகளும் ஆர்வம் காட்டுகின்றன.பேஸ்புக், ட்விட்டர், ஆர்க்குட் இணைய தளங்கள் மூலம் வேலை தேடவும் முடியும் என கூரியர்மெயில் நிறுவன பெண் அதிகாரி பாப்வொர்த் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ÔÔஇது எளிதானது, செலவில்லாதது. தேவையான வேலை, தனது திறமை ஆகியவற்றை முகவரி, தொடர்பு எண்களுடன் சமூக இணைப்பு இணைய தளங்களில் விளம்பரம் செய்யலாம்ÕÕ என்றார்.வேலை தேடுபவர்கள் தவிர நிறுவன அதிகாரிகளும் இந்த இணைய தளங்கள் மூலம் சரியான ஊழியரை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆல்செமி எச்ஆர் சர்வீசஸ் என்ற நிறுவனம், பேஸ்புக் இணைய தளத்தில் 25க்கு மேற்பட்ட தொடர்பு வைத்துள்ள உறுப்பினர்களை வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

டப்பிங் படம்... டாப் இடம்

கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளரும் இயக்குநருமான ராம நாராயணன் படங்களே தயாரிக்கவில்லை, இயக்கவுமில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ், ஏவிஎம் போன்ற ஜாம்பவான்களை விட அதிக லாபம் ஈட்டிய தயாரிப்பாளர் அவராகத்தான் இருப்பார்... காரணம் ஹாலிவுட் படங்கள்!.2009-ம் ஆண்டில் ராமநாராயணன் வாங்கி வெளியிட்ட திரைப் படங்களுள் முக்கியமானது அருந்ததீ. அனுஷ்கா முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டது. இந்தப் படம் பல கோடி லாபம் சம்பாதித்துக் கொடுத்தது ராம நாராயணனுக்கு.

இந்தப் படத்துக்கு போட்டியே இல்லாத நிலை இருந்தது ஒரு கட்டத்தில். சென்னை உட்லண்ஸில் இந்தப் படம் தொடர்ந்து 35 நாட்கள் அவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது குறிப்பிடத்தக்கது. கிராமப் புறங்களிலும் அருந்ததிக்கு அட்டகாசமான வரவேற்பு இருந்தது.

இன்னொரு முக்கியமான டப்பிங் படம் '2012'. இந்தப் படம் குறித்து பண்டிதர்கள் தாறுமாறாக திட்டித் தீர்த்தாலும், தமிழகத்தில் முதல் வாரத்திலேயே ரூ 9 கோடியைக் குவித்தது 2012. ஒரிஜினல் தமிழ்ப் படங்கள் ஒரு வாரத்தைத் தாண்டவே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்தபோது, 2012 மட்டும் ஐம்பது நாட்களைத் தாண்டி ஜம்மென்று ஓடியது. அவ்வளவு ஏன்.. புறநகரில் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸில் புதிதாக ரிலீசான டாப் நடிகரின் படத்தைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இந்தப் படத்தைத்தான் திரையிட்டார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகித ரசிகர் கூட்டத்துடன் இரண்டு வாரங்களாக ஓடுகிறதாம் இந்தப் படம்.


இந்தியா முழுவதும் நான்கு வாரங்களில் 90 கோடியைத் தாண்டியுள்ளது இந்தப் படத்தின் வசூல். 2012-ன் தமிழக உரிமை வெறும் ரூ 35 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

அப்படியெனில் லாபத்தின் சதவிகிதம் எவ்வளவு என்று கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது, இப்போது ஓடிக்கொண்டுள்ள அவதார். இதன் தமிழக உரிமையை சத்யம் மற்றும் ராம நாராயணன் இணைந்து வாங்கி வெளியிட்டார்கள். இதுவரை எந்தப் படத்திலும் கிடைக்காத லாபம் அவதார் மூலம் கிடைத்துள்ளது. இன்னும் கூட அவதாருக்கு சத்யம் திரையரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் மட்டும் முதல் வார இறுதியில் ஒரு கோடி வசூலித்தது அவதார். இந்தப் படத்தை வாங்கிய விலை இதை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் எக்ஸ்மேன் வல்வொரைன், மிரட்டல் அடி போன்ற படங்களும் வாங்கியவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் வசூல் சாதனை நிகழ்த்தின.

டாஸ்மாக்கில் 'களைகட்டிய' புத்தாண்டு

சென்னையிலும் தமிழகத்திலும் குடிப்பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் விளைவாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தாண்டின்போது மதுவிற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தப் புத்தாண்டே கிட்டத்தட்ட மதுவின் துணையுடன்தான் பெரும்பாலானோருக்கு விடிந்திருக்கிறது எனும் அளவுக்கு புத்தாண்டு அன்று மட்டும் ரூ 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இதுவரை தமிழகம் காணாத புதிய 'சாதனை' இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தம் 6,694 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன.


புத்தாண்டு தினத்தில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பிவழிந்தது. பல இடங்களில் குடிமகன்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்க போலீசார் உதவினர்! டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி மட்டும் அனைத்து பார்களும் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சாலையோர சால்னா கடைகளில் கூட்டம் மொய்த்தது.

பல இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்து, நின்று அல்லது படுத்த வண்ணம் குடித்துக் கொண்டிருந்தது இந்த இரு தினங்களிலும் சகஜமான காட்சியாக இருந்தது. பெரும்பாலும் இந்த குடிமகன்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

சென்னையில் மட்டும் புத்தாண்டு தினத்தில் ரூ.7 கோடிக்கு மது பாட்டில் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். தமிழகம் முழுவதும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.பிரபல சரக்குகள் 'நோ ஸ்டாக்'!மது விற்பனை படுஜோராக நடைபெற்றதால் பிரபலமான 'சரக்கு'களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கேட்ட சரக்கு கிடைக்காததால், கிடைத்த சரக்கை மதுப் பிரியர்கள் வாங்கி திருப்தியடைந்தனர். பல இடங்களில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பீர் பிரியர்களும் விஸ்கி, பிராந்தி என வாங்கி குடித்து தங்கள் புத்தாண்டு கடைமையை நிறைவேற்றினர்.


கூடுதல் விலைக்கு...இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டாலும், பார்களிலும், வெளியிடங்களிலும் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. பல டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு ஊழியர்கள் அடைக்க முயன்றபோது, குடிமகன்கள் பிடிவாதமாக தடுத்தனர்.
போலீஸ் துணையுடன்தான் இந்தக் கடைகளை அடைக்க முடிந்தது.

17 வயது மாணவனுடன் ஓடிய 25 வயது ஆசிரியை

தன்னிடம் டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவனைக் காதலித்த 25 வயது டியூசன் டீச்சர் அவருடன் ஓடி விட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னை முத்தையால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஸிரீன். 25 வயதான இவர் எம்.காம் படித்துள்ளார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார். பலர் படித்து வந்தனர்.இவரிடம் டியூசன் படித்தவர்களி்ல் ஒருவர் 17 வயதேயான பிளஸ்டூ மாணவன் ஆண்ட்ரூஸ். பிளஸ்டூவை முடித்து விட்டு ஆண்ட்ரூஸ் கல்லூரியில் சேர்ந்தார்.டியூசன் படித்தபோது நஸிரீனுக்கும், ஆண்ட்ரூஸுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
வயது வித்தியாசம், மதம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திருமணத்திற்கு பெரும் தடை வரும் என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.2 மாதங்களுக்கு முன்பு இது நடந்தது. ஆண்ட்ரூஸ் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதால், இன்னும் கல்யாணம் நடந்திருக்காது என்று தெரிகிறது. 21 வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்திருக்கலாம் என்றும் அதுவரை தலைமறைவாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரூஸின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை

கோலாலம்பூர்: மலேசியா வில் வாழும் இந்திய வம்சவாளியினரின் (பெரும்பாலும் தமிழர்கள்தான்) எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் மலேசியாவில் தமிழர்களின் எண்ணிக்கை அடியோடு காணாமல் போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளார் மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் பாலதருமலிங்கம்.இதுகுறித்து தமிழ்நேசன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் இந்தியர்கள் குறைந்த அளவிலான குழந்தைகளையே விரும்புகிறார்கள். அதிக குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பூண்டோடு அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்றார் பாலதருமலிங்கம்.மலேசிய மக்கள் தொகையில், மூன்று முக்கிய இனப் பிரிவுகள்தான் மேலோங்கியுள்ளன.
பெரும்பான்மைப் பிரிவாக மலாய் மக்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் சீனர்கள் (25 சதவீதம்) உள்ளனர். 3வது இடத்தில் வம்சாவளி இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்களே

நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதிய ஆண்டு பிறந்ததையொட்டி, நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.சென்னை நகரில் புத்தாண்டை யொட்டி, நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை, தேவாலயங்கள் என அனைத்து முக்கிய இடங்களும் களை கட்டி இருந்தன. பெரிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
சென்னை நகரில் புத்தாண்டை யொட்டி, நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை, தேவாலயங்கள் என அனைத்து முக்கிய இடங்களும் களை கட்டி இருந்தன. பெரிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
நேற்று சந்திர கிரகணம் என்பதால் இரவு 10 மணி அளவில் கோவில்களில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்ததும், கோவில்களில் பரிகார பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்' என்று வேண்டி சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

மொபைல் கம்பெனிகளுக்கு ரூ.132 கோடி அபராதம்

மொபைல் கம்பெனிகளுக்கு டெலிகாம் துறை மொத்தம் ரூ.132 கோடி அபராதம் விதித்துள்ளது. அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற ஒராண்டு காலத்தில் மொபைல் சேவை தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வோடோபோன் எஸ்ஸார், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் கம்பெனிகள் தப்பித்துள்ளன.அபராத விவரம்: டாடா டெலி சர்வீசஸ் ரூ.36.5 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.28.20 கோடி. ரிலையன்ஸ் ரூ.19.85 கோடி, டாடா டெலி சர்வீசஸ்&மகாராஷ்டிரா ரூ. 3.7 கோடி.