கலைஞர் வீட்டுவசதி திட்டம்: ஜனவரி 31-க்குள் வீடுகள் ஒப்படைப்பு


கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியது:

குடிசைகளை அகற்றி, கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் உலக அளவில் பாராட்டப்படுகிறது. 6 ஆண்டு கால திட்டமான இதன் மூலம், மொத்தத்தில் 21 லட்சம் பேர் பயன் அடையவுள்ளனர். முதற்கட்டமாக 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.

வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 6-வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பார். எனவே, அடுத்த 6 ஆண்டு காலத்துக்குள் கலைஞர் வீட்டு வசதித் திட்ட வீடுகள் கட்டும் பணி முடிóவடையும்.சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் 1967-க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் அங்கீகாரம் பெறாத நிலை இருந்தது.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், இதற்கான சட்டத்தை இயற்றினார். அன்று முதல் தமிழை செம்மொழியாக்கியது வரை திமுக அரசுதான் அனைத்தையும் செய்துள்ளது.தேர்தல் அறிக்கைகளை புத்தகமாக்கி, திமுக வெளியிட்டது. தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளர்கள் அல்ல. திமுகவின் தேர்தல் வாக்குறுதி புத்தகம்தான் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார் என்றார்.

0 comments: