
சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு கல்லூரி ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் பவுசியா பானு.
இவர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் பவுசியா பானு இன்று பிற்பகல் உயிரிழந்தார்.
ஆசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment