இரட்டை போலியோ தடுப்பு மருந்து

பி1 மற்றும் பி3 ஆகிய இருவித போலியோ நோய்களையும் தடுக்கும் பிரத்தியேக பிஓபிவி போலியோ தடுப்பு மருந்து நாட்டில் முதல்முறையாக பீகாரில் இன்று குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மூலம் வெளியிடப்பட்ட இந்த 'டூஇன்ஒன்' சிறப்பு போலியோ மருந்து முதல்கட்டமாக பீகாரில் இன்று சுமார் 25 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

போலியோ நோயில் பி1, பி2, பி3 ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இதில் மிகவும் அபாயகரமான பி2 வகை போலியோ நோய் கடந்த 1999ம் ஆண்டிலேயே இந்தியாவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பி1 மற்றும் பி3 போலியோ ஒழிப்புக்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் அளிக்கப்படும் பி1 நோய் தடுப்புக்கான எம்ஓபிவி1 தடுப்பு மருந்து உபயோகப்படுத்தப்படுகிறது.

போலியோவை ஒழிக்க ஆண்டுக்கு ரூ. 1200 கோடி அரசு செலவழிக்கிறது. ஆனாலும் இந்த போலியோவை முற்றிலுமாக ஒழிக்க இயலவில்லை.

இந்நிலையில் பி1 மற்றும் பி3 ஆகிய இரண்டு வகை போலியோக்களையும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிஓபிவி தடுப்பு மருந்தை மத்திய அரசு தற்போது உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக தற்போது பீகார் மாநிலத்திலும், அடுத்தாண்டு முதல் உத்தரப்பிரதேசத்திலும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

0 comments: