ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும்' என மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.


திருவல்லிக்கேணியில் நடந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியம் பேசியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 135 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டரை லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர். முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் வழங் கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார மையங்களில், அதி நவீன முறையில் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு சமீபத்தில் மாநகராட்சி கமிஷனருக்கு விருது வழங்கியுள்ளது.


இன்று நடக்கும் முகாம்களில் கோடை காலத்தில் வரும் நோய் களுக்கும், காச நோய்க்கும் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர், குளிர்பானங்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. இருபது மைக்ரான் அளவுள்ள, ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப் படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


வரும் 29ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்துடன் ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பான பாக் கெட்டுகளும் தடை செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசி னார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

0 comments: