பரமக்குடி வைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்: தூக்கத்தில் நகராட்சி நிர்வாகம்

Tamilnadu special news update பரமக்குடி வைகை ஆறு முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகமாக காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடியில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் வைகையாற்றில் கூடுவது வழக்கம். அப்போது நகராட்சி பின்புறம் உள்ள பகுதி, பெருமாள் கோயில் படித்துறை, காக்காத்தோப்பு படித் துறை போன்ற ஆற்றுப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவர். ஆண்டுதோறும் விழா முடிந்தவுடன் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆற்றில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டு வந்தது.


இந்த ஆண்டு இதுவரை குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் பிளாஸ்டிக் குப்பைகள் முதல் அனைத்து வகையான கழிவுகளும் ஆங்காங்கே சிதறி காற்றில் பறக்கின்றன. திருவிழா நடைபெற்ற நாட்களில் தினந்தோறும் நகராட்சி பணியாளர்களால் குப்பைகள் கூட்டி குவித்து வைத்து விட்டு சென்று விட்டனர். ஆனால் இன்று வரை அவைகள் அள்ளப்படாமல் சுகாதாரகேடாக உள்ளது. வைகையாற்றில் குவிந்துள்ள குப்பைகளால் நீர் நிலைகளுக்கு பாதிப் பும்,மக்களுக்கு தொற்று நோய் அபாயமும் உள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் மாலை நேரங்களில் வைகையாற்றில் விளையாடுவதும், கூடுவதும் வழக்கம். அள்ளப்படாமல் உள்ள குப்பைகளால் துர் நாற்றம் வீசுகிறது. வைகையாற்றில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

0 comments: