தாய்-தந்தைக்கு கோவில் கட்டி வழிபடும் மகன்

வேலூர் சலவன்பேட்டை பாரதியார் நகர் செங்காநத்தம் பகுதியில் வசிக்கும் பைனான்சியர் ராமச்சந்திரன், தனதுதந்தை வெள்ளை நாயக்கர், தாய் ஜெகதாம்பாள் ஆகியோருக்கு 30 லட்சம் செலவில் கோவில் கட்டியுள்ளார். 8 ஆயிரம் சதுர அடியில் ஜொலிக்கிறது இக்கோவில்.

கருவறையில் 7 1/2 அடி உயர வெள்ளை நாயக்கர் சிலை, 6 1/2அடி உயரத்தில் ஜெகதாம்பாள் சிலை 1 1/2 அடி உயரத்தில்
சிவலிங்கம் அமைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் கடவுளை விட தாய், தந்தை உயர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து அவர்கள் சிலையை பெரிதாக வைத்துள்ளேன் என்கிறார் பைனான்சியர் ராமச்சந்திரன்.

கோவிலில் தினமும் காலை மாலை பூஜைகள் நடக்கிறது. இதற்கென தனியே பூசாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ராமச்சந்திரன், ‘’எனது தந்தை வெள்ளை நாயக்கர் பீடி தொழிலாளி. எனது 14 வயதில் இறந்து விட்டார். அதற்குபின் தாய் ஜெகதாம்பாள் என்னையும், எனது சகோதரியையும் கஷ்டப்பட்டு வளர்ந்தார். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார்.

நான் உழைப்பினால் உயர்ந்தேன். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு எனது தாய் இறந்து விட்டார். அவரை பிரிய
மனமில்லாமல் எனது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்தேன்.

அதே இடத்தில் எனது பெற்றோருக்கு கோவில் கட்டியுள்ளேன்’’என்கிறார்.

0 comments: