சவுதி அரேபியா அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய டாக்டர்கள், நர்சுகளுக்கு நேர்முகத் தேர்வு

சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற டாக்டர்கள் மற்றும் பெண் நர்சுகளுக்கான நேர்முகத்தேர்வு டில்லியில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய இருதயம், இருதய அறுவை சிகிச்சை பிரிவின் அனைத்துத்துறை ஆலோசனை நிபுணர்கள், சிறப்பு டாக்டர்கள், ரெசிடென்ட் டாக்டர்கள், பி.எஸ்.சி. மற்றும் டிப்ளமோ பெண் நர்சுகள், பெண் கேத்லேப் டெக்னிசியன்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (10ம் தேதி) முதல் 15ம் தேதி வரை டில்லியில் சவுதி அரேபியா தேர்வுக்குழுவால் நடக்கிறது.இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகளும் வழங்கப்படும். இதற்கு இருதய மருத்துவத்துறையில் 2 ஆண்டுகள் அனுபவமும், 55 வயதிற்குட்பட்ட டாக்டர்கள் மற்றும் 3 ஆண்டு அனுபவமும், 40 வயதிற்குட்பட்ட பி.எஸ்.சி. மற்றும் டிப்ளமோ தகுதி உடைய பெண் நர்சுகள், பெண் கேத்லேப் டெக்னீசியன்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் நகல்கள், 5 போட்டோக்களுடன் புதுடில்லி சாணக்கியபுரி, கவுடில்யா மார்க், பழைய தமிழ்நாடு இல்லத்தில் செயல்படும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன அலுவலர்களை நேர்முக தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு http://www.omcmanpower.com அல்லது 9381800181, 09711976463, 24467557 என்ற போன் எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

0 comments: