அதிக கட்டணம் வசூலித்தால் அமைச்சர் எச்சரிக்கை

Latest indian and world political news information

அரசு அமைத்துள்ள குழுவின் கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் பேசும்போது, 'பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்ய, அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழுவின் முடிவு வரும் முன்பே, பல பள்ளிகளில், துண்டுச் சீட்டு மூலம் அட்மிஷன் முடிந்துள்ளது.


நாங்கள் தான் கட்டணத்தை நிர்ணயிப்போம் என மெட்ரிக் பள்ளிகள், அரசுக்கு சவால் விடுக்கின்றன. இவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' எனக் கேட்டார்.


இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை:ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு, பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்து, கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. மொத்தமுள்ள 10 ஆயிரத்து 951 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 250 பள்ளிகள், தங்களது கட்டண விவரத்தை குழுவிடம் தெரிவித்துள்ளன.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்வேறு வசதிகளை செய்ய வேண்டியிருப்பதால், சேர்க்கையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் கூறியதால், சேர்க்கை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அமைத்துள்ள குழுவின் கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

0 comments: