சென்னை வந்தது பிரான்ஸ் போர் கப்பல்

பிரான்ஸ் நாட்டின் அதிநவீன கடற்படை போர்க் கப்பல் எப்.என்.எஸ், சமி. கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் புரூனோ நெய்லி அலின்டெய்ன் மற்றும் கமாண்டர் ஜீன் வெஸ் பவுட் தலைமையில் 10 அதிகாரிகள், 59 ஊழியர்கள் மற்றும் 100 பார்வையாளர்களுடன் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.



எப்.என்.எஸ்., சமி போர்களின் சமயத்தில் மற்ற கடற்படை கப்பல்களுக்கு தலைமை வகித்து இயக்கும் வல்லமை படைத்தது. கடந்த 1990ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிரான்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பல், 'போபர்ஸ்' பீரங்கி, 'ஒர்லிகான் கனான்', எம் 2 இயந்திர துப்பாக்கிகள் மற்றும், 'சிம்பாட் மிஸ்டிரல்' ஏவுகணைகளை செலுத்தும் சக்தி கொண்டது.



சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்த, 'சமி' போர்க் கப்பலை, இந்திய கடற்படை கமாண்டர் ராஜிவ் கிரோத்ரா வரவேற்றார். இக்கப்பலில் பயணம் செய்தவர்கள், தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், பாரம்பரிய சிறப்புமிக்க இடங்களையும் சுற்றிப் பார்க்க உள்ளனர்.



இக்கப்பல் 7ம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: