



தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் ஏப்ரல் 18 அன்று மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ முகாமிற்கு மாவட்ட து.செயலாளர் அப்துஸ் சமது தலைமை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜன் ராய், கயத்தார் காவல்துறை ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் கோவில்பட்டி சுகாதார பணி இயக்குநர் ரால்ப் செல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். தமுமுக மற்றும் மனிதநேய மக்கள்¢கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் ஜமாஅத்தார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நன்றி : தமுமுக
0 comments:
Post a Comment