ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி* வெளியேறியது வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை லீக் போட்டியில், 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த வங்கதேச அணி, உலககோப்பையிலிருந்து வெளியேறியது.


வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், குரூப் "ஏ' பிரிவில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.


விக்கெட் "மடமட': ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாட்சன் துவக்கம் தந்தனர். வங்கதேச பந்து வீச்சில் அனல் பறந்தது. மொர்டசா வேகத்தில் வாட்சன் (4) சொற்ப ரன்களுக்கு அவுட்டானார். சற்று நேரம் தாக்குப்பிடித்த வார்னர் 16 ரன்களுக்கு (1 சிக்சர், 2 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் (16), ஹாடின் (6), டேவிட் ஹசி (9), ஒயிட் (8) ஆகியோரும் சொதப்ப, 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா.


மைக்கேல் ஹசி அசத்தல்: பின்னர் களமிறங்கிய மைக்கேல் ஹசி, தனி ஆளாகப் போராடினார். இவருக்கு ஸ்டீவன் ஸ்மித் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஸ்மித் 27 ரன்கள் (2 சிக்சர், 1 பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். இந்த ஜோடி 7 வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து அசத்தியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 141ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி 47 (1 சிக்சர், 4 பவுண்டரி) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


அஷ்ரபுல் ஏமாற்றம்: சற்று கடினமான இலக்கை விரட்டிய வங்கதே அணிக்கு அஷ்ரபுல் (0) மோசமான துவக்கம் தந்தார். பந்து வீச்சில் மிரட்டிய நானஸ், இம்ருல் கெய்ஸ் (0) அப்தாப் (1), மகமதுல்லா (2) ஆகியோரை சொற்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார்.


சாகிப் ஆறுதல்: சற்று நேரம் தாக்குப் பிடித்த கேப்டன் சாகிப் (28), முஷ்பிகுர் (24) ஆறுதல் அளித்தனர். நயீம் (7) ஏமாற்றினார். பின்வரிசையில் சபியுல் (16), ஜகருல் (18) ஓரளவு ரன் சேர்த்தனர். இருப்பினும் அணியை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை. 18.4 ஓவர் முடிவில் ஆல்-அவுட்டான வங்கதேச அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.


வங்கதேசம் "அவுட்': குரூப் "ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேச அணி, லீக் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததன் மூலம், "டுவென்டி-20' உலககோப்பையிலிருந்து வெளியேறியது. இப்பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. நாளை நடக்க உள்ள "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


------------


ஸ்கோர் போர்டு


ஆஸ்திரேலியா


வார்னர் (கே) அப்தாப் அகமது (ப) சாகிப் 16 (11)
வாட்சன் (கே) அப்தாப் அகமது (ப) மொர்டசா 4 (7)
கிளார்க் (கே) ஜகருல் (ப) அஷ்ரபுல் 16 (21)
ஹாடின் (கே) சபியுல் (ப) அப்துர் ரசாக் 6 (9)
டேவிட் ஹசி (கே) முஷ்பிகுர் (ப) மொர்டசா 9 (13)
ஒயிட் (ப) சாகிப் 8 (11)
மைக்கேல் ஹசி -அவுட் இல்லை- 47 (29)
ஸ்மித் -ரன் அவுட் (முஷ்பிகுர்) 27 (18)
ஹாரிஸ் -அவுட் இல்லை- 2 (1)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 141
விக்கெட் வீழ்ச்சி: 1-16 (வாட்சன்), 2-21 (வார்னர்), 3-37 (ஹாடின்), 4-52 (மைக்கேல் கிளார்க்), 5-57 (டேவிட் ஹசி), 6-65 (ஒயிட்), 7-139 (ஸ்மித்).
பந்து வீச்சு: மொர்டசா 4-0-28-2, சபியுல் 4-0-34-0, சாகிப் 4-0-24-2, அப்துர் ரசாக் 4-0-29-1, அஷ்ரபுல் 4-0-24-1.


வங்கதேசம்


இம்ருல் கெய்ஸ் (கே) டேவிட் ஹசி (ப) டெய்ட் 0 (6)
அஷ்ரபுல் (கே) டெய்ட் (ப) நானஸ் 0 (3)
அப்தாப் அகமது (கே) வார்னர் (ப) நானஸ் 1 (3)
சாகிப் (கே) மைக்கேல் ஹசி (ப) ஸ்மித் 28 (28)
மகமதுல்லா (கே) மைக்கேல் ஹசி (ப) நானஸ் 2 (3)
முஷ்பிகுர் (கே) மைக்கேல் ஹசி (ப) டேவிட் ஹசி 24 (25)
நயீம் (கே) ஸ்மித் (ப) டேவிட் ஹசி 7 (6)
ஜகருல் (கே) கிளார்க் (ப) நானஸ் 18 (12)
சபியுல் (ப) ஸ்மித் 16 (13)
மொர்டசா (ப) ஹாரிஸ் 6 (5)
அப்துர் ரசாக் -அவுட் இல்லை- 3 (8)
உதிரிகள் 9
மொத்தம் (18.4 ஓவரில் ஆல்-அவுட்) 114
விக்கெட் வீழ்ச்சி: 1-4 (இம்ருல்), 2-4 (அஷ்ரபுல்), 3-13 (அப்தாப் அகமது), 4-15 (மகமதுல்லா), 5-63 (சாகிப்), 6-70 (நயீம்), 7-81 (முஷ்பிகுர்), 8-100 (சபியுல்), 9-106 (ஜகருல்), 10-114 (மொர்டசா).
பந்து வீச்சு: டெய்ட் 4-2-15-1, நானஸ் 4-0-18-4, மைக்கேல் கிளார்க் 1-0-12-0, ஹாரிஸ் 3.4-0-28-1, ஸ்மித் 4-0-29-2, டேவிட் ஹசி 2-0-8-2.

0 comments: