'டுவென்டி-20' உலககோப்பை 'சூப்பர்-8': இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா வெற்றி

'டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் 'சூப்பர்-8' போட்டிகள் துவங்கின. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றன.


வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது 'டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் துவங்கின. முதல் போட்டியில் குரூப் 'இ' பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட் பீல்டிங் தேர்வு செய்தார்.


சல்மான் ஆறுதல்: முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல், சல்மான் பட் துவக்கம் தந்தனர். சைட்பாட்டம் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தி லேயே சிக்சர் அடித்து அதிரடியை துவக்கினார் கம்ரான். ஆனால் இவரது (15) ஆட்டம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சல்மான் பட் 34 ரன்கள் (3 பவுண் டரி, 1 சிக்சர்) சேர்த்து வெளியேறினார். ஹபீஸ் (18) பெரிய அளவில் சோபிக்க வில்லை.


அப்ரிதி 'அவுட்': பின்னர் வந்த கேப்டன் அப்ரிதி (0), ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு, வீணாக ரன்-அவுட்டானார். மிஸ்பா (13) ஏமாற்றினார். சற்று நேரம் தாக்குப் பிடித்து ஆடிய உமர் அக்மல் (30) ஆறுதல் அளித்தார். பின்வரிசையில் அப்துல் ரசாக் (10), பவத் ஆலம் (1), ஆமர் (3) ஆகியோர் சொதப்பினர். கடைசி கட்டத்தில் சயீத் அஜ்மல் (13) ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 147 ரன்கள் சேர்த்தது.


நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு லம்பின் அதிரடி, நல்ல துவக்கமாக அமைந்தது. முகமது ஆசிப் வீசிய ஆட்டத்தின் 4 வது ஓவரில், ஒரு சிக்சர், 3 பவுண்டரி களை விளாசினார் லம்ப். இவர் 25 ரன்களுக்கு அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் கீஸ்வெட்டர் (25) ஆறுதல் அளித்தார்.


பீட்டர்சன் விளாசல்: பின் வந்த பீட்டர்சன், பாகிஸ்தானின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இவருடன் இணைந்த கேப்டன் கோலிங்வுட் 16 ரன்களுக்கு அவுட்டானார். மார்கன் (5) சோபிக்க தவறினார். அபாரமாக ஆடிய பீட்டர்சன், 'டுவென்டி-20' அரங்கில் 4 வது அரை சதம் கடந்தார். 2 சிக்சர், 7 பவுண்டரி உட்பட இவர் 70 ரன்கள் குவிக்க, 19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.


'வில்லன்' அஜ்மல் : நேற்று பாகிஸ்தான் அணி-யின் பீல்டிங் படுமட்டமாக இருந்தது. அதிலும், சயீத் அஜ்மல் 3 'கேட்ச்' வாய்ப்பு-களை வீண-டித்தார். இங்கி-லாந்து துவக்க வீரர் கீஸ்வெட்டர், கொடுத்த 2 'கேட்ச்' வாய்ப்பு-களை கோட்டை விட்டார். ஒரு முறை கீஸ்வெட்டர் ரன் எது-வும் எடுக்க வில்லை. மற்றொரு முறை 3 ரன்கள் எடுத்தி-ருந்தார். இத-னைப் பயன்ப-டுத்திக் கொண்ட இவர், 25 ரன்கள் சேர்த்தார். இங்கி-லாந்தின் மற்றொரு துவக்க வீரர் லம்ப் கொடுத்த, கேட்சை-யும் நழுவ விட்டு பாகிஸ்தா-னுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தார்.


நெருக்கடி : பாகிஸ்தான் அணி அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.


நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா போட்டி : பார்படாஸ்: தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்திற்கிடையே பரப்பரப்பாக நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 13 ரன்னில் வெற்றி பெற்றது. 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, விறு விறுப்பான 'சூப்பர்-8' போட்டிகள் இன்று துவங்கின. இன்றைய 2-வது போட்டியில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதன்படி களமிறஙகிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 47 ரன்னும் மார்கல் 40 ரன்னும் சேர்த்தனர். 171 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. நியூசிலாந்து அணியின் ரைடர் 33 ரன் எடுத்தார் ,நாதன் மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 26 ரன்களும் வெட்டோரி 10 ரன்களும் எடுத்து வெற்றி போராடினர். இறுதியில் தென்ஆப்பிரிக்கா 13 ரன்னில் வெற்றி பெற்றது.

0 comments: