இந்திய சினிமா துறைக்கு ரூ.4,507 கோடி இழப்பு

இணைய தளம் மூலமாக திரைப்படங்கள், பாடல்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்த திருட்டினால் இந்திய திரைப்படத்துறைக்கு ஓராண்டில் மட்டும் ரூ.4507 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் 5.72 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வதில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா.

இரண்டாவது இடம் பிரிட்டனுக்கு. மூன்றாவது இடத்தில் கனடாவும் நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இத்தகைய திருட்டுக்கு உதவிய இணைய தள முகவரிகள் அடிப்படை யில் இது தெரிய வந்தது.
இந்தி திரைப்படங்கள்தான் பெரும்பகுதி இந்தியாவில் திருடப்படுகின்றன. விஷால் பரத்வாஸின் காமினி படம் மட்டுமே 3.50 லட்சம் முறைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரில் பெரும்பாலும் பதிவிறக்கப்படுவது தமிழ்ப்படங்கள்தான்.

ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் தெலுங்கு படங்களே அதிகம் பதிவிறக்கப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத பதிவிறக்கத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என மோஷன் பிக்சர்ஸ் டிஸ்டிரிபியுட்டர்ஸ் அசோஷியேஷன் மானேஜிங் டைரக்டர் ராஜீவ் டலால¢ கூறினார்.

இந்திய திரைப் படத்துறைக்கு சட்ட விரோத திருட்டு காரணமாக ஓராண்டில் ரூ.4507 கோடி இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் 5.,72 லட்சம் வேலை வாய்ப்புகளும் பறி போனது என எர்னஸ் அண்ட் யங் நிறுவனம் தன்னுடைய 2008ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.

0 comments: