அனைத்துக் கடன்களையும் ஒரே தவணையில் செலுத்துகிறது துபாய் வேர்ல்ட்!

கடன் கொடுத்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் முழுமையாக அதைத் திருப்பிக் கொடுக்க துபாய் வேர்ல்ட் குழுமம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு நிறுவனம், திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது.


இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.
இந்த நிலையில் துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.


துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.


துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளனர்.


விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: