பிரதமர் டென்மார்க் பயணம்

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 193 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன.

இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங், சீன பிரதமர் வென்ஜியாபோ, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று டென்மார்க் புறப்படுகிறார்

0 comments: