வெளிநாட்டு ஊழியருக்கு குடும்ப விசா

ங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் பதவியை கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்குவதற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக் கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவுதி அரசு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் பதவி, பொருளாதார அடிப்படையில் குடும்பதினருடன் தங்குவதற்கான விசா வழங்கி வந்தது. இதனால், டாக்டர், இன்ஜினியர், உயர் அதிகாரிகள் மட்டுமே பயனடைந்தனர். மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர முடியாத சூழல் இருந்தது. இதனால் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தங்களுக்கும் குடும்ப விசா வழங்க வகை செய்ய வேண்டும் என்று ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய பதவியை கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்குவதற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கான வெளிநாட்டினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊழியரின் பதவியின் அடிப்படையில் குடும்ப விசா வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் இனி குடும்ப விசா வழங்கப்படும். இதற்காக, புதிய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் மனைவியின் பெயரை பாஸ்போர் ட்டில் சேர்க்க விரும்புகிறவர்கள், திருமண சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும என சவுதி அரசின் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments: