தேர்தல் விவகாரம் இறுதி முடிவு :நரேஷ் குப்தா

தி.மு.க.வை சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன், சமீபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 20 ந் தேதியன்று பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நேரத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடுவது சிரமம் என்று கூறி, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல அரசியல் கட்சிகள், பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தபடி உள்ளன.


இதற்கிடையே முதல்வர் கருணாநிதியிடம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்றோர், பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
பென்னாகரம் இடைத்தேர்தலும் சரி, இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களும் சரி தமிழக அரசை தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை. இப்போது பென்னாகரம் இடைத்தேர்தலையும் மாநில அரசை கலந்து ஆலோசித்துவிட்டு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. எங்களைப் பொருத்தமட்டில் தேர்தல் கமிஷன் மீது மிகுந்து மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்'' என்று பதில் அளித்திருந்தார்.


மேலும், சட்டமன்றத்தில் 6ந் தேதி இடம் பெறவுள்ள கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிடலாமா? பொங்கலின்போது ஏழைகளுக்கு, அரசு வழங்கும் இலவச வேட்டி சேலையை வினியோகிக்கலாமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளார்.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகை உள்பட பல்வேறு காரணங்களால், பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த 7 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகள் ஆகிய 11 அரசியல் கட்சிகளுடன், பென்னாகரம் தேர்தல் தொடர்பாக விவாதிக்கும் வகையில் ஒரு அவசர கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க ஆகிய 4 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நரேஷ்குப்தா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார்.


இந்த கூட்டத்தில், பென்னாகரம் இடைத்தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் விரிவான முறையில் தேர்தல் துறையினர் விவாத்தனர். இந்த கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட விஷயங்களை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் நரேஷ்குப்தாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூட்ட முடிவுல் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா,
இரு தரப்பு கோரிக்கையும் தேசிய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் கமிஷனின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments: