பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொலைதூர ஊர்களுக்கு 80 சிறப்பு பஸ்களை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.பொங்கல் பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

ரயில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சொந்த ஊருக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களை நம்பி உள்ளனர். திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து 956 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 48 ஏசி பஸ்கள் உப்பட சொகுசு பஸ்கள் உள்ளன. இந்நிலையில் பொங்கலுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் ஏசி, சொகுசு உள்ளிட்ட பஸ்களும் அடங்கும். விரைவு போக்குவரத்து கழகத்தின் 53 மையங்களிலும், சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ்கள் பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பு இருந்து ஒரு வாரத்துக்கு இயக்கப்படும்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கலுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்ÕÕ என்றார்.

0 comments: