ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய இராணுவ நிலைமை இலகுவாவதை விட கடினமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆப்கான் போரை பார்வையிடும் அமெரிக்காவின் மத்திய அதிகாரம் கூறியுள்ளது.
இதனை தெரிவித்த General David Petraeus வருகிற காலங்களில் ஆப்கானில் சண்டைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர் 2007 இல் ஈராக்கில் அமெரிக்க படைகளுடன் பணியாற்றியவர்.
இவர் ஆப்கான் நிலைமை பற்றி கூறும்பொழுது, "இது ஈராக்கின் நிலைமையை விட மோசமாகவில்லை என்றும் ஈராக் போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்று ஆப்கானில் கொல்லப்படவில்லை" என்றும் கூறியுள்ளார்.
Petraeus மேலும் கூறியதாவது, "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முன்னேறுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா தற்பொழுது மேலும் 30000 படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியது பற்றி கூறிய அவர், இந்த படைகள் ஆப்கானின் நிலைமையை முன்னேற்றுவதற்கு இன்னும் 18 மாதங்கள் ஆகும்" என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் படி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது 2011 க்கு பிறகுதான் என்பது தெளிவாக தெரிகின்றது.
0 comments:
Post a Comment