வேதாரண்யம் அருகே குளத்தில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலியான சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்ட டிரைவர் நேற்று நாகை கோர்ட்டில் சரணடைந்தார்.அந்த வேனின் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பனையடி குத்தகை என்ற இடத்தில் கடந்த 3ம் தேதி பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 9 குழந்தைகள், ஒரு ஆசிரியை இறந்தனர்.
11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். தலைமறைவான நாககுடையானை சேர்ந்த வேன் டிரைவர் மகேந்திரன் (25), கிளீனர் சுப்பிரமணியன்(17) ஆகியோரை கரியாப்பட்டினம் போலீசார் தேடி வந்தனர். இவர்கள் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று நாகை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மகேந்திரன் சரணடைந்தார். அவரை 18ம் தேதி வரை சிறை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையே, கிளீனர் சுப்பிரமணியனை கரியாப்பட்டினம் போலீசார் நேற்று கைது செய்தனர். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment