சீனா-45,000 கோடீஸ்வரர்கள்!

இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கோடீஸ்வரர் கண்கெடுப்பைப் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்திருக்கும்... சீனாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரின் சொத்து மதிப்பு 6000 கோடி டாலருக்கு மேல்!ஒரு காலத்தில் தனியுடைமை அனுமதிக்கப்படாத செஞ்சீனத்தில் இன்று கோடீஸ்வரர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள். சர்வதேச அளவில் உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போதிலும், சீனாவில் மட்டும் பெருகும் இந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

சீனாவில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.4.8கோடி) மேல் சொத்து வைத்திருக்கும் செல்வச் சீமான்களின் எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் நான்கரை லட்சத்தை கடந்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.இந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அடுத்த நான்காண்டுகளில் 8 லட்சத்தை எட்டிவிடும் என்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாறாக, சீனாவில் கொழிக்கும் செல்வம் பெரும்பாலும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே போய் குவிந்துவிடுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தை கூட எட்ட முடியாத இந்த எண்ணிக்கையில்தான் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.ஆனால், கிட்டதட்ட சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட சொத்து இவர்களிடம்தான் இருக்கிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்டாங் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களாகவே உள்ளனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.ஆனால் ஒரு சின்ன திருப்தி இந்திய பணக்காரர்களுக்கு... என்னதான் சீனாவில் பணக்காரர்கள் பெருகினாலும் அவர்களின் எண்ணிக்கையும் சரி, சொத்து மதிப்பும் இந்தியர்களோடு ஒப்பிடுகையில் ஜூஜுபி... இந்தியாவில் மொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு 270 பில்லியன் டாலர்கள். ஆனால் சீனாவில் 170 பில்லியனுக்கும் குறைவுதானாம்!.

0 comments: