ஆபாச அர்ச்சகருக்கு காவல் முடிகிறது?

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தார்.

இவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த பல வி.ஐ.பி. பெண்களுடனும், விபசார அழகிகளுடனும் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த பெண், அர்ச்சகர் தேவநாதன் தன்னை வசியம் செய்து மயக்கி கோவில் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு போட்டனர்.

போலீசார் புதிதாக ஒரு கற்பழிப்பு வாக்கு சேர்த்ததால் தேவநாதன் ஜாமீன் பெற முடியாமல் போனது. நாளை (14-ந்தேதி) தேவநாதன் நீதிமன்ற காவல் முடிந்து காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

0 comments: