சந்திரசேகரராவின் பூர்வீகம் தெலுங்கானா அல்ல!

ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு சந்திரசேகரராவ் போராட்டம் நடத்தினார். அவரது தீவிர போராட்டத்தால் இப்போது தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு ஆந்திராவின் மற்ற பகுதி மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
ஆனால் சந்திரசேகரராவுக்கே தெலுங்கானா சொந்த பகுதி அல்ல என்று இப்போது தெரியவந்துள்ளது. சந்திரசேகரராவின் மூதாதையர் ஊர் ஆந்திரா பகுதியில் தான் உள்ளது என்று தெரியவந்துள்ளது.
சந்திரசேகரராவ் தெலுங்கான பகுதியில் மேடக் மாவட்டத்தில் உள்ள சித்தி பேட் கிராமத்தில் 55 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவருடைய தந்தை, தாத்தா ஆகியோரும் இங்கு தான் பிறந்தனர்.
ஆனால் அதற்கு முந்தைய தலைமுறையினர் ஆந்திர பகுதியான பொப்பிலி பகுதியில் இருந்து தெலுங்கானாவுக்கு வந்துள்ளனர். வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் பொப்பிலி பகுதி தனி சமாஸ்தானமாக இருந்தது.
150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் இங்கிருந்து வெளியேறி தெலுங்கானா பகுதியில் குடியேறினார்கள்.
அப்போது சந்திரசேகரராவ் குடும்பம் பொப்பிலி பகுதியில் தெலுங்கானா பகுதியில் உள்ள மேடக் மாவட்டத்தில் குடியேறி உள்ளது.

0 comments: