கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் ஐ.நா. வானிலை மாற்ற மாநாட்டை வலியுறுத்தி அந்நகரில் நடந்த பேரணியில் வன்முறை மூண்டதையடுத்து சுமார் 1000 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா. வானிலை மாற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவை எடுக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.
இதில், வல்லரசு நாடுகள் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்வதில் தடுமாறுவதை கண்டித்தும், ஐ.நா. வானிலை மாநாடு திடமான முடிவு எடுக்க வலியுறுத்தியும் இப்பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலர் செங்கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததையடுத்து, அவர்களை சுற்றிவளைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 968 பேரில், விசாரணைக்குப் பிறகு 150 பேர் விடுவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment