ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய இந்திய தலைவர்களை ரணில் விக்ரமசிங்க சந்திக்க உள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக பெயரிடப்பட்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்ச இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: