இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் யுவராஜ்சிங்குக்கு நேற்று 28-வது பிறந்தநாளாகும். பிறந்த நாளில் தனது சொந்த மண்ணில் நடந்த போட்டியில் யுவராஜ்சிங் வெளுத்து வாங்கினார்.60 ரன்கள் குவித்த அவர் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யுவராஜ்சிங் பிறந்த நாள் பரிசாக ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
நேற்று இந்திய அணி சர்வதேச 20 ஓவர் போட்டியில் சாதனை படைத்தது. 2-வது பேட்டிங் செய்த இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் ஜோகனஸ்பர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது பேட்டிங் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
0 comments:
Post a Comment