திருச்செந்தூர் இடைத்தேர்தலையொட்டி, தென் மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தியை இட மாற்றம் செய்ய வேண்டுமென, தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ‘’ திருச்செந்தூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தென் மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தியை இட மாற்றம் செய்ய வேண்டுமென, தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தென் மண்டலத்திற்கு அருகில் உள்ள மண்டல ஐ.ஜி.,யிடம், கிருஷ்ணமூர்த்தி தன் பொறுப்பை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலின் போதும், கிருஷ்ணமூர்த்தி இட மாற்றம் செய்யப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment