காயல்பட்டணம் கலந்துரையாடலில் கனிமொழி.

திருச்செந்தூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த கனிமொழி எம்.பி., முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் காயல்பட்டணத்தில் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
விலைவாசியை குறைக்க கனிமொழியிடம் பெண்கள் வலியுறுத்தினர்.
அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான், கால்நடைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமூகநலவாரிய தலைவர் சல்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெண்கள் பல்வேறுகருத்துக்களை கனிமொழியிடம் வலியுறுத்தினர். தமிழ்வழிக்கல்வியை அமல்படுத்த வேண்டும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
காயல்பட்டணத்தில் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் கனிமொழி பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு பதிலளித்த கனிமொழி, நான் இஸ்லாமியர்களிடம் வந்து தி.மு.க.,விற்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க வேண்டியதில்லை. இஸ்லாமியர்கள் எப்போதுமே தி.மு.க.,வின் பக்கம் இருப்பீர்கள்.
இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் கட்டாயம் பங்கேற்பேன் என்றார். கூட்டத்தில் உயர்ந்து வரும் விலைவாசியால் பொதுமக்கள், ஏழைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்கிற கோஷமும் ஒலித்தது.

0 comments: