சென்னை வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 ஆயிரம் மரங்களை வெட்டியதற்கு பதில் புதிய மரங்கள் நடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் ஞானேஸ்வரன் பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையை அடுத்த வண்டலூர் வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 20 ஆயிரம் மரங்களை வெட்டிவிட்டனர்.
இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் காக்க அரசு தவறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் எதுவும் நடப்படவில்லை.
ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடவேண்டும் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி 6 வாரத்தில் பதில் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
Post a Comment