தாலிபான் களை ஒடுக்க உறுதியான நடவடிக்கையை பாகிஸ் தான் எடுக்காவிட்டால், அங்கு அமெரிக்க படை களை அனுப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரி துள்ளார்.
பாகிஸ்தானிலுள்ள தாலிபான் முகாம்களை மூட அந்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கையை எடுக் காவிட்டால், அமெரிக்காவே அதனை செய்ய தனது படையை பாகிஸ்தானுக்கு அனுப்பும் தன்னிச்சையான நடவடிக்கையை எடுக்க நேரிடும் என ஒபாமா தலை மையிலான அரசு பாகிஸ் தானுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பி உள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு வசிரிஸ்தானி லுள்ள முகாம் களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அத்துடன் தாலிபான் தலைவர் முல்லா ஒமர் மற்றும் அவரது ஆதர வாளர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதும் அமெரிக்கா, அவர்கள் மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் பாகிஸ்தான் படை யினர் அதனை செய்ய தயங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்க அரசு மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment