ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் மேற்கொண்டதால், தெலுங்கானா பகுதியில் அடங்கிய மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து தனி தெலுங்கானா கோரிக்கையை ஏற்றுக்கொள்வது என மத்திய அரசு முடிவு செய்தது.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 105 எம்.எல்.ஏ.க்கள் நேற்று (10.12.2009) தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் 52 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 42 பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும், 11 பேர் பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் சேர்ந்தவர்கள்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள போதும், ஆந்திர மாநில எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை சட்டசபை தொடங்கியவுடன் தனி தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட மற்ற எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஷ்டிரிய சமிதி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment