காவல் படை வீரர்கள் கடத்தல்

இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் ஒன்று கடந்த 9ஆம் தேதி ராமேசுவரத்தில் இந்திய எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள் 7 படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்ததை கடலோர காவல் படை அதிகாரிகள் பார்த்து விட்டனர்.

உடனே கப்பலை அந்த படகுகள் நின்ற இடத்துக்கு விரைந்து செலுத்தினர். அந்த 7 படகுகளும் இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதையும் கண்டுபிடித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த குற்றத்திற்காக கைது செய்வதாக கூறி சிங்கள மீனவர்களை 7 படகுகளுடன் அழைத்து வந்தனர்.

ஒவ்வொரு படகிலும் இந்திய கடலோர காவல் படையின் கமாண்டோ வீரர்கள் 2 பேர் பாதுகாப்புக்காக வந்தனர். இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு பின்னால் 7 படகுகளும் வரிசையாக அணிவகுத்து வந்தன. திடீரென ஒரு படகு மட்டும் மாயமாக மறைந்து விட்டது. அந்த படகில் இருந்த 2 இந்திய கடலோர காவல்படை கமாண்டோ வீரர்களை சிங்கள மீனவர்கள் படகுடன் கடத்தி சென்று விட்டனர். அவர்கள் எங்கு கடத்தி செல்லப்பட்டார்கள்? என்ன ஆனார்கள்? என்பது மர்மமாக உள்ளது. உடனடியாக இந்திய கடல் பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலமும், போர் கப்பல்கள் மூலமும் காணாமல் போன சிங்கள படகையும், இந்திய கடலோர காவல்படை கமாண்டோ வீரர்கள் 2 பேரையும் தேடி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த 6 சிங்கள படகுகளையும் மீனவர்களுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்திற்கு இந்திய கடலோர காவல்படை அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.

0 comments: