தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என சில அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ராமதாஸ், “பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.
எனவே நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதே சிறந்தது” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது பல தரப்பில் இருந்தும் தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறிய ராமதாஸ், தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களைக் கூறவில்லை.
0 comments:
Post a Comment