கடல் கொந்தளிப்பால் கோவா சரக்கு கப்பல் ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை கடக்க முடியாமல் நிற்கிறது.
ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன் கடல்பகுதி கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன்,கடல் கொந்தளிப்பாக உள்ளது.
தற்போது பாம்பன் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கோவா சரக்கு கப்பல் ஒன்று பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு நாட்களாக நிற்கிறது.
இந்த சரக்கு கப்பல் கோவாவில் புதிதாக தயாரிக்கப்பட்டு கோல்கத்தாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. .கடல் சீற்றத்தினால் தூக்கு பாலத்தை கடக்க அனுமதி வழங்கவில்லை. இரண்டொரு நாளில் அனுமதி வழங்கப்படும் என துறைமுக ஊழியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment