நாட்டின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் மும்பையில் கட்டப்பட்டு வருகிறது. 65 தளங்களுடன் அமைய உள்ள இது நாட்டின் முதல் பசுமை குடியிருப்பு கட்டிடம் என்ற பெருமையைப் பெறும்.ஸ்ரீராம் அர்பன் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், மும்பையின் வொர்லி பகுதியில் பலெய்ஸ் ராயல் என்ற பெயரில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருகிறது.
298 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த கட்டிடத்தில் 65 தளங்கள் இருக்கும். 6 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாராகும். மொத்தம் ரூ.800 கோடி முதலீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம், நாட்டின் உயரமான குடியிருப்பு கட்டிடம், முதல் பசுமை குடியிருப்பு கட்டிடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற உள்ளது.
மேலும் உலகிலேயே பசுமை குடியிருப்பு கட்டிடங்களுக்கு வழங்கப்படும் உயரிய பிளாட்டினம் அந்தஸ்தையும் பெற உள்ளது.இந்த கட்டிடத்துக்கு அருகில் 300 மீட்டர் உயரம் கொண்ட டெலிவிஷன் கோபுரம் உள்ளது. எனினும், இடையில் 800 மீட்டர் இடைவெளி உள்ளதால் இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என ஸ்ரீராம் நிறுவன தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஸ்லிவால் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment