இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பயணியிடம் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கநகையினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். . இன்று காலை கொழும்பு நகரிலிருந்து ஏர்லங்கா விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது ஒரு பயணி மட்டும் முதல் வகுப்பு கிரீன் சிக்னல் வழியாக வெளியேற முயற்சித்தார். உடனே சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது அவருடைய கைப்பையில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகைகளை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment