ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக அமைச்சரவையில் இடம்பெற்று உள்ள ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமாக பெல்லாரியில் ஓபலாபுரம் கனிம நிறுவனம் இயங்கி வருகிறது. இதன்மூலம் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர எடியூரப்பாவிடம் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்து பேசிய அவர்,
கர்நாடகத்தில் சுரங்க கனிம ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால், மாநிலத்தில் அவர்கள் கூறுவதுபோல் சுரங்க ஊழல் எதுவும் நடைபெறவில்லை. நான் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு புதிய கனிம சுரங்க குவாரிக்கு லைசென்சு எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் சவால்களை சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
0 comments:
Post a Comment