சிங்கப்பூரில் வண்ணமிகு தீபாவளி


சிங்கப்பூரில் தீபாவளி வந்து விட்டதற்கு முக்கிய அடையாளம் லிட்டில் இந்தியாவில் ஒளி வெள்ளம், கேம்பல் லேன் தீபாவளி கிராமம், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தை.

இவை மூன்றும் இம்மாதம் 7ம் தேதி வியாழக்கிழமையன்று செயல்படத் தொடங்கிவிட்டது.

கேம்பல் லேன் தீபாவளி கிராமும், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தையும் வியாழக்கிழமை காலை யிலேயே செயல்படத் தொடங்கி விட்டன.

தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் 4ம் தேதி இரவு வரை இந்தச் சந்தைகள் செயல்படும்.

கேம்பல் லேன் விழாக் கிராமத்தில் விற்பனைச் சந்தையுடன் இந்தியாவிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டுள்ள இந்தியப் பாரம்பரிய கைவினைக் கலை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிராங்கூன் பிளாசா எதிரே அமைக்கப்பட்டுள்ள வர்த்தகச் சந்தையில் பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளி ஒளியூட்டு பெரிய விழாவாக வியாழன் இரவு இடம் பெற்றது.

இவ்வாண்டு ஒளியூட்டு, செல்வச் செழிப்பை மையமாகக் கொண்டுள்ளது.

இதில் விளக்குத் தோரணங்களின் வடிவமையமாக இவ் வாண்டு விளக்குகளே இடம் பெற்றுள்ளன.

பொருளியல் மந்தத்தில் இருந்து வெற்றிகரமாய் சிங்கப்பூர் மீண்டதைக் கொண்டாடும் விதத்திலும், இன¬ வரும் நாட் களிலும் வளமை கொழிக்க வாழ்த்தும் விதத்திலும் செல்வச் செழிப்பை மையமாய்க் கொண்டதால், முகப்பில் யானைகள் குளிர்விக்கும் { மகாலட்சுமி அருள் வழங்கியபடி வீற்றிருக் கிறாள்.

இந்த ஒளியூட்டின் ஏற்பாட் டாளர்களான இந்து அறக் கட்டளை வாரியத்தினரும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தி னரும் இவ்வாண்டு ஒளியூட்டில் வளமையுடன் பசுமையையும் முக்கியமாய்க் கருத்தில் கொண்டு உள்ளனர்.

இதற்காகச் சுற்றுப்புறச் சூழ லுக்குகந்த வகையில் மின்சக்திச் சேமிப்பு விளக்குகளை ஒளியூட்டுக்குப் பயன்படுத்தி உள்ளனர்.

அதிக மின்சக்தி இழுக்கும் மஞ்சள் விளக்குகளுக்கு பதில் வெள்ளை விளக்குகள் பயன்படுத்தியுள்ளதில் துவங்கி, ஏற் கனவே இருக்கும் தெரு விளக்குக் கம்பங்களையே பயன்படுத்தியுள்ளது வரை மின்சக்திச் சிக்கன நடவடிக்கைகள் பளிச்சிடுகின்றன.

மேலும் அக்டோபர் 30ம் தேதி ‘தீபாவளி உற்சவ்’ எனப் படும் சாலை ஊர்வலம் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 7.00 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ஊர்வலம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சில் பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் ‘தீபாவளி உற்சவ்’ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்கிறார்.

நவம்பர் 4ம் தேதி வசந்தம் - எம்1 தீபாவளி ‘கவுன்டவுன்’ சிறப்பு நிகழ்ச்சி. ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெறும் உள் ளூர் -மலேசிய கலைஞர்களின் ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிபர் எஸ். ஆர். நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்று மகிழலாம்.

"இந்துக்களுக்குத் தீபாவளி ஒரு முக்கியமான உன்னதமான பண்டிகை. இந்த மகிழ்ச்சிமிகு பண்டிகை மூலம் இந்திய மக்க ளின் வலுவான பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பண்புகளைப் பறைசாற்ற நாங்கள் எண்ணி உள்ளோம்.

"அதற்காக பற்பல நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்து உள் ளோம்," என்றார் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு எஸ் நல்லதம்பி.

‌விமான‌ங்க‌ள் மோத‌ல்

மு‌ம்பை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று மோ‌தி‌க் கொ‌ண்ட ‌நிக‌ழ்‌வு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.
கி‌ங்‌பிஷ‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌விமான‌ம் ஒ‌ன்று ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் சர‌க்குகளை இற‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தது.

மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து ம‌ஸ்க‌ட் செ‌ல்லு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வ‌ே‌‌‌ஷ் ‌விமான‌ம் ஒ‌ன்று ‌கி‌ங்‌கிஷ‌ர் ‌விமான‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த தட‌த்த‌ி‌ல் இரு‌ந்து புற‌ப்பட தயாரா‌கி கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது ‌ர‌ன்வே‌யி‌ல் பி‌ன்‌புறமாக வ‌ந்த ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌விமான‌த்‌தி‌ன் இற‌க்கைக‌ள் ‌நி‌ன்று கொ‌ண்டி‌ரு‌ந்த சர‌க்கு ‌விமான‌த்‌தி‌ன் ‌பி‌ன்புற‌ம் உர‌சி உ‌ள்ளது.

இதனா‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்களு‌ம் பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் அ‌தி‌ர்‌ந்து‌ள்ளது. ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌‌விமான‌ம் ‌கி‌ங்‌பிஷ‌ர் ‌விமான‌த்துட‌ன் உர‌சிய ‌சி‌றிது நேர‌த்‌தி‌லேயே ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டதா‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் ‌நிகழ இரு‌ந்த அச‌ம்பா‌வித‌ம் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌விமான‌த்‌தி‌‌‌‌ன் இற‌க்கைக‌ள் இலேசாக சேத‌ம் அடை‌ந்து‌ள்ளது. ‌ஜெ‌ர் ஏ‌ர்வே‌ஷ் விமான‌த்‌தி‌ற்கு‌ள் சுமா‌ர் 100 பய‌ணிக‌ள் உ‌ள்பட ‌சி‌ப்ப‌ந்‌திக‌ள் பாதுகா‌ப்பாக ‌‌கீழே இற‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

‌‌விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று உர‌சி கொ‌ண்ட ‌நிக‌ழ்வு கு‌றி‌த்து ‌மு‌ம்பை ‌விமான ‌நிலைய பொறு‌ப்பு ஆணைய‌ம் ‌உய‌ர் ம‌ட்ட ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

450 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமுமான பாபரி மஸ்ஜித் தேசத் துரோக சங்பரிவார்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை நாம் அறிவோம்.

இது இந்திய தேசத்திற்கே மிகப் பெரிய அவமானமாகவும், தலைக் குனிவாகவும் உலக அரங்கில் இருந்து வருகின்றது.

பாபரி பள்ளிவாசல் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் சரியாகவும், முறையாகவும், நீதியாகவும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபோது நெஞ்சில் இடியாக வந்தது அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

பள்ளிவாசல் இடத்தை மூன்று பங்காக வைத்து எந்தவிதமான சட்ட அடிப்படையோ, ஆவண அடிப்படையோ இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துத் தீர்ப்புப் போல் வழங்கியது இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. கண் முன்னால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது கண்டும் நீதி கிடைக்கவில்லையே என்ற வேதனை, கொந்தளிப்பு இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

இந்த அநீதியை ஜனநாயக ரீதியாக கண்டிக்கும் வண்ணமாக அலஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக் கூடிய சூழல் தற்போது இல்லாததால், சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என குடும்பத்துடன் பெருந்திரளாக சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி...


நீதி வேண்டும்! நீதி வேண்டும்! பாபரி பள்ளிவாசல் வழக்கில் நீதி வேண்டும்!

காந்தி வாழ்ந்த தேசமடா! அம்பேத்கர் தந்த சட்டமடா!

மாறிப் போச்சு மாறிப் போச்சு! கட்டப் பஞ்சாயத்தாய் மாறிப் போச்சு!

உடையவனுக்கு ஒரு பங்கு! உடைத்தவனுக்கு 2 பங்கா!

இது நீதியா!! அநீதியா??

ஆபத்து! இது ஆபத்து! நீதித்துறைக்கே ஆபத்து!!

இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் பாபரி பள்ளியை கட்டுவோம்!

இந்தியாவை வல்லரசாக உருவாக்குவோம்!

என்று விண் முட்டும் கோஷங்களுடன் உறக்க உணர்ச்சிகரமாக குரல் எழுப்பியபடி முற்றுகையிட முனைந்தபோது, காவல் துறையினரால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த அறப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M.பாக்கர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், யாதவ மகாசபைத் தலைவர் டாக்டர். தேவநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொருளாளர் யூஸுஃப், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், முஸ்லிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது, இந்திய தேசிய லீக் அமைப்பாளர் தடா அப்துர் ரஹீம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், துணை பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர்களான அப்துல் ஹமீது, அபு ஃபைஸல், இனாயத்துல்லா, முஹம்மது ஷிப்லி, செங்கிஸ்கான், வேளாச்சேரி சிராஜ், அபூ ஆசியா மற்றும் கோவை ஜஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாவட்ட நிர்வாகிகள் யூனுஸ், காஜா கரீமுல்லாஹ், யூஸுஃப்கான், ஹனிஃபா, தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ், ஹனீஃப், ஹஸன் அலி, ஆவடி ஃபாரூக், ஷான் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இதஜ நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். சகோதரிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மண்டபங்களில் சிறை வைக்கப்பட்ட பெண்களுக்கு மாநில பேச்சாளர் மசூதா ஆலிமா உரை நிகழ்த்தினார்.

சீனாவில் இரண்டு கால்களுடன் நடந்து வரும் பன்றி!

இரண்டு கால்களுடன் மட்டுமே நடந்துவரும் பன்றி ஒன்று சீனாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

10 மாதமேயான இப்பன்றி சூங் ஜியாங் குயாங் என அக் கிராமத்திலுள்ளவர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றது.


பிறந்ததிலிருந்து இப்பன்றி 2 கால்களால் மட்டுமே வாழ்ந்து வருகின்றது.


இவ்வருடம் பிறந்த ஒன்பது பன்றிக்குட்டிகளில் இக்குட்டி மட்டுமே இவ்வாறு பிறந்ததாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.


இதன் நிலையைக் கண்ட தனது மனைவி இதனை எறிந்து விடும்படி கூறியதாகவும் தான் அந்த யோசனையை மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.


தற்போது இதன் நிறை 50 கிலோகிராம்கள் ஆகும். இதன் உரிமையாளரே இதற்கு நடைப்பயிற்சி வழங்கியுள்ளார்.


இதனை விலைக்கொடுத்து வாங்க பலர் முன்வந்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

தமிழக சட்ட மேலவை தேர்தல்....

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.
அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.
இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.

em1.jpg

em2.jpg

நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.

தவறான தீர்ப்புக்கு ஜனநாயக போராட்டம்...

பாபர் மஸ்ஜித் பற்றிய அலஹபாத் தீர்ப்பு குறித்த ஐ.என் டி .ஜே. நிலைப்பாடு தான் சரியானது என்ற நிலைக்கு சமுதாயத்தில் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது !

தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் , சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கூட உயர் நீதி மன்ற முற்றுகை பற்றிய அறிவிப்பும், திருமாவளவன்,தேவநாதன் ,கிருஷ்ணசாமி ,மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும், பல் முனையில் இருந்தும் வரும் ஆதரவில் இருந்தும் 'பூனைக்கு மணி கட்டும்' போராட்ட அறிவிப்பின் மூலம் கட்டாய திருமண சட்டத்தை எதிர்த்து முதல் போராட்டத்தையும், குரான் எரிப்பை கண்டித்த போராட்டத்திலும் களம் கண்ட முதல் இயக்கம் எனும் பெருமையுடன் ,நன்மையில் முந்திக்கொண்ட நற்க்கூலியையும் இறைவனிடம் இருந்து இ.த.ஜ. பெற்று கொள்ளும்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் டி.என்.டி.ஜே. வின் செயற்குழுவும் அலஹபாத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி ௪-ல் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.முதலில் எதிர்த்து, பின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க போவதாக மன்னடி கூட்டத்தில் மடத்தனமாக கூறினாலும் தற்போதய மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது!

அடுத்து த.மு.மு.க.,பாப்புலர் பிரான்ட் போன்ற இயக்கங்களும் தயக்கத்தை கைவிட்டு போராட்டங்களை அறிவிக்க வேண்டும் ! தமிழகத்தில் இ.த.ஜ. ஏற்றி வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப்பரவ வேண்டும். என இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் கேட்டுகொன்ன்டுள்ளார் .

போராட்டம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. சுமார் 450 ஆண்டுகள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியில் தொழுகையே நடைபெறவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 1949, டிசம்பர் 23-வரை தொழுகை நடந்துள்ளது.


அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், அங்கு தொழுகையே நடைபெறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது.


இந்துக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே! உணர்வின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாங்கள் உரிமையின் அடிப்படையில் போராடுகிறோம். முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவி உள்ளோம். நாட்டில் வாழும் இந்து சகோதரர்கள் முஸ்லிம்களின் தொப்புள்கொடி உறவுகள்தான் என்பதில் ஐயமில்லை. அதற்காக, உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.


நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்துத்தான் 60 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் ராமர் பிறந்த இடம், பள்ளிவாசலுக்கான கூறுகள் போன்ற வழக்கிற்கு தொடர்பில்லாதவை குறித்தெல்லாம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.


காங்கிரஸ் காரணம்: அயோத்தி பிரச்னையில் பாபர் மசூதிக்கு பூட்டு, பூட்டை உடைத்து பூஜை, மசூதியை தரைமட்டமாக்கியது போன்ற நிகழ்வுகளின்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துள்ளதை வரலாறு நிரூபிக்கிறது. அணு உலை விபத்துகான இழப்பீடு மசோதா, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சியினரை திருப்திபடுத்தும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறதோ என ஐயம் எழுந்துள்ளது.


போராட்டம்: அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி மத்திய, மாநில அரசுகளுக்குப் எதிராகப் போராட்டம் நடத்த உள்ளோம். இதுகுறித்து ஆலோசனை நடத்த எங்கள் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என்றார் பாக்கர். பேட்டியின்போது அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநிலச் செயலாளர் அபுபைசல், ஆகியோர் உடன் இருந்தனர்

நன்றி: தினமணி