Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts

ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண் டும். ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி, 60 வயதான ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சுற்றுலாத் துறை மூலம் கட்டண மீட்டர் வழங்கி கட்டணத்தை முறைபடுத்த வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் லைசென்ஸ், பேட்ச் வழங்க வேண்டும்.


ஆட் டோ ஸ்டேண்டுகளுக்கு நகராட்சி சார்பில் மேற் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, நேற்று புதுச்சேரி அனைத்து ஆட்டோ சங்கங் களின் கூட்டு போராட்டக் குழுவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் அண்ணா சாலையில் இருந்து பேரணியாக புறப் பட்டு சட்டசபை நோக்கி வந்தனர். சட்டசபை அருகில் அவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு, பின் முதல்வர் வைத்திலிங் கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கோபஹன்ஹேகனில் ஆர்ப்பாட்டம் : 1000 பேர் கைது

கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் ஐ.நா. வானிலை மாற்ற மாநாட்டை வலியுறுத்தி அந்நகரில் நடந்த பேரணியில் வன்முறை மூண்டதையடுத்து சுமார் 1000 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா. வானிலை மாற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவை எடுக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.
இதில், வல்லரசு நாடுகள் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்வதில் தடுமாறுவதை கண்டித்தும், ஐ.நா. வானிலை மாநாடு திடமான முடிவு எடுக்க வலியுறுத்தியும் இப்பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலர் செங்கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததையடுத்து, அவர்களை சுற்றிவளைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 968 பேரில், விசாரணைக்குப் பிறகு 150 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு "தூண்டில் பாலம்' அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராதாபுரம் தொகுதியில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, உவரி, தோமையார்புரம், கூடுதாழை, கூட்டப்பனை ஆகிய மீனவ கிராமங்களுக்கு தூண்டில் பாலம் அமைக்காமல் மீனவ மக்களை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள ஜெயலலிதா, இந்த பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

அதிமுக ஆர்பாட்டம்

தமிழகத்தில் இலவச கியாஸ் அடுப்பு வழங்கியவர்களுக்கு உடனடியாக சிலிண்டர்கள் வழங்காததை கண்டித்தும், ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வந்த மானியத்தை தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. மருத்துவ அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் மைத்ரேயன் தலைமை தாங்கினார்.வட சென்னை மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காலி சிலிண்டர்களுடன் வந்து கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சேகர்பாபு, 161 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது ரூ. 316 ஆகி உள்ளது. 10 ஆண்டில் 9 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாற்றினார்.கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றிருப்பவர்கள் எப்போது கேட்டாலும் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.


ஆனால் கேஸ் ஏஜென்சிகள் 21 நாட்கள் கழித்துதான் சிலிண்டர்களுக்கு பதிவு செய்கிறார்கள். அதிலிருந்து 10 நாட்கள் கழித்து தான் சிலிண்டர்கள் வருகிறது.ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வந்த ரூ. 30 மானியத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தகக்து. மீண்டும் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை வழங்க வேண்டும் என்று சேகர்பாபு வலியுறுத்தினார்.


அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது போல 58 லட்சம் ஏழை குடும்பங்களின் ரேசன் கார்டுகளுக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும், வெள்ள நிவாரணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியதைப் போன்று 3 மடங்காக வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.