ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காலி சிலிண்டர்களுடன் வந்து கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சேகர்பாபு, 161 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது ரூ. 316 ஆகி உள்ளது. 10 ஆண்டில் 9 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாற்றினார்.கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றிருப்பவர்கள் எப்போது கேட்டாலும் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.
ஆனால் கேஸ் ஏஜென்சிகள் 21 நாட்கள் கழித்துதான் சிலிண்டர்களுக்கு பதிவு செய்கிறார்கள். அதிலிருந்து 10 நாட்கள் கழித்து தான் சிலிண்டர்கள் வருகிறது.ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வந்த ரூ. 30 மானியத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தகக்து. மீண்டும் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை வழங்க வேண்டும் என்று சேகர்பாபு வலியுறுத்தினார்.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது போல 58 லட்சம் ஏழை குடும்பங்களின் ரேசன் கார்டுகளுக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும், வெள்ள நிவாரணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியதைப் போன்று 3 மடங்காக வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment