பக்ரீத் பண்டிகையை யொட்டி, ராஜஸ்தானிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டு ஒட்டகங்கள், குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
பக்ரீத் பண்டிகையை யொட்டி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் யாக்கூப் ஏற் பாட்டின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ராஜஸ் தானிலிருந்து 27 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட் டுள்ளன. இவற்றில் இரண்டு ஒட்டகங்கள் தாம்பரத் திற்கு லாரி மூலம் வந்து சேர்ந்தன.
இந்த ஒட்டகங் கள் ஒவ்வொன்றும் தலா 40 ஆயிரம் ரூபாய். மதுரையிலிருந்து ஆடுகள் வந்தன: பக்ரீத் பண்டிகையை ஒட்டி, "குர்பானி' கொடுப் பதற்காக மதுரையிலிருந்து வண்ண வண்ண செம்மறி ஆடுகள் சென்னைக்கு வந்தன.
பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் ஆந்திரா, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் இருந்து ஆடுகளின் வரத்து குறைந்தது. இந்த ஆண்டு, மதுரை கொட்டாம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, ரோமங்களில் வண்ணம் பூசிய செம்மறி ஆடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
அவை மாதவரம் ரவுண் டானா பாலம் அருகே விற்பனை செய்யப்பட்டன. 15 முதல் 18 கிலோ வரை எடை கொண்ட ஒவ்வொரு ஆடும், 6,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பலரும் வந்து வாங்கிச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இஸ்லாமியர்களின் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சி இப்ராஹீம் நபி தனது மகனான இஸ்மாயிலை அறுத்து பலியிட அல்லாஹ்விடத்திலிருந்து ஆணை வந்ததையடுத்து சற்றும் யோசிக்காமல் அதை நறைவேற்ற முனையும் போது அல்லாஹ் விடமிருந்து வந்த ஒரு ஆட்டை பழியிட அல்லா குருவத்தின் நினைவாக இது உலகம் முழுவதும் இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள் .
Post a Comment