20 சதவீத கட்டண சலுகை வழங்கும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் பயணம் செய்யும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு முதல் வகுப்பு மற்றும் 'எக்ஸ்சிகியூடிவ்' வகுப்புகளில் 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.31.3.10 தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும்.

இச்சலுகையைப் பெற்று வெளிநாடு சென்றிருந்தாலும், 31.3.10 தேதிக்குப் பிறகு அதே மார்க்கத்தில் இந்தியாவுக்கு திரும்பும் போதும் இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.உள்ளூரில் பயணம் செய்ய விரும்பும் முதிய பயணிகளுக்கு பொருளாதார வகுப்புகளில் 50 சதவீத கட்டண சலுகை ஏற்கெனவே தரப்படுகிறது.

0 comments: