Showing posts with label பள்ளிக்கூடம். Show all posts
Showing posts with label பள்ளிக்கூடம். Show all posts

ஐ.... நாளைக்கும் லீவு !

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார். விடுமுறைக்கான மாற்று பணிநாள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (23.12.2009) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

காலையில் பள்ளி; இரவில்'பார்'

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரவு நேரத்தில் புகுந்து மதுபானங்களை குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் சமூக விரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளிக்கு இணையாக ஊக்குவிக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இப்பள்ளியில் முதல் முறையாக, புதிதாக பள்ளிக்கு வரும் ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, சீனியர் மாணவர்கள் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளியின் சாலையை ஒட்டிய சுற்றுச் சுவர் பகுதிகளில் வண்ணம் பூசி, அதில் திருக்குறள் மற்றும் பொன்மொழிகள் எழுதி வைத்துள்ளனர்.


அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக மாறி வரும் நிலையில், இரவு நேரத்தில் சில சமூக விரோத கும்பல் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து, மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்தில் நுழைந்த சமூகவிரோத கும்பல், மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை அங்குள்ள ஒரு வகுப்பறையின் ஜன்னலில் வைத்து விட்டு சென்றுள்ளது.இத்தகைய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேர கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரனிடம் கேட்ட போது
, "பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில், இரவில் பள்ளி வளாகத்தில் நுழைந்து இது போன்ற இழி செயல்களில் ஈடுபடும் சமூகவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

831 நடுநிலை பள்ளிகளில் 100 கோடியில் புது கட்டிடங்கள்

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட 831 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 100 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. செயல் வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறைகளை வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு ரூ.863 கோடி பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் 831 தொடக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கும் புதிய பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும் ரூ.100 கோடி ஓதுக்கப்படுகிறது.

மாவட்டத்துக்கு 2 வீதம் 60 கணிணி மையங்கள் அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாள் கணிணி பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 37, 456 பள்ளிகளில் செய்லவழி கற்றல் நடைமுறையில் உள்ளது.

இவற்றிற்காக 45 ஆயிரம் செயல் வழி கற்றல் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. 4 வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் கற்றல் அட்டைகள் வழங்கப்படும் என்றார் அவர்.