பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா

தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழாவையொட்டி தஞ்சையில் வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் மாதிரி வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அரங்கம், பெரியகோவிலில் கருத்தரங்கம், தஞ்சையில் 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு, ,பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர்கள் கருணாகரன், மூர்த்தி, கலெக்டர் சண்முகம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வி சிவஞானம், மற்றும அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.


விழா பற்றி கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். வருகிற 24-ந்தேதி தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி தொடங்குகிறது. மேலும் தஞ்சையில் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-


பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி ¢உள்ளார். சோழர்களின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெறும். மேலும் சோழர்களின் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலையை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும்.


ராஜராஜனின் சிலை குஜராத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இந்த சிலையை மீட்க சுற்றுலா துறை செயலாளர், தொல்லியல்துறை செயலாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குஜராத் சென்று பேச்சு நடத்தினார்கள். அவர்கள் இது பற்றி ஆ¢ய்வு செய்து தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

0 comments: