அயோத்தி நிலம் தொடர்பாக வரும் 24-ம் தேதி வெளியாக உள்ள தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.எம்.சையத் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு இந்த கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு 24-ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி வாசல்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் அக். 3-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர், மாவட்டத் தலைவர் முஹம்மது ஹூஸைன், துணைத் தலைவர் இமாம்தீன், செயலர் பக்கீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
sourse: intjonlin.in
0 comments:
Post a Comment